2012 முதல் செப்டம்பர் மாதம் அல்சைமர் விழிப்புணர்வு மாதமாகவும் செப்டம்பர் 21 அல்சைமர் தினமாகவும் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
அல்சைமர் நோய் பாதித்தவர்களால் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது. பழகிய முகங்களையேகூட மறந்துவிடுவார்கள். பிறரின் உதவியில்லாமல் தனியாக செயல்படவே முடியாது.எனக்கு எல்லாமே மறந்து போய்ட்டா ரொம்ப நல்லா இருக்கும்”. நாம் இதை நகைச்சுவையாக சொல்வோம் என்றாலும்கூட, உண்மையாகவே இதுபோன்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மட்டுமே அதனால் ஏற்படும் இன்னல்கள் எவ்வளவு சிரமத்தை கொடுக்குமென்பது உணர்வுப்பூர்வமாக தெரியும். இதன் தீவிர பாதிப்புதான், அல்சைமர் எனும் ஞாபக மறதி.
தாத்தா, பாட்டி போன்றவர்கள் “எனக்கு சுத்தமா ஞாபகமே இல்லப்பா, பெயர்களைக்கூட நினைவுல வச்குக்க முடியல” என்று கூறுவதில் தொடங்கி, கடைசியில் வீட்டில் இருந்து வெளியே சென்றால் மீண்டும் எப்படி வீட்டிற்கு வருவது என்ற வழியினை கூட மறந்து விடும் அபாயத்திற்கு இட்டுச்செல்கின்றது ஞாபக மறதி. இது தீவிரப்படுவதுதான் அல்சைமர் எனும் நோய்.
குறிப்பிட்ட சில ஜீன்களில் ஏற்படும் மரபணு மாற்றம்தான் இந்தற்கான முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. அடிக்கடி தலையில் அடிபடுதல், கடும் மன அழுத்தம், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றின் காரணமாகவும் இது ஏற்படலாம்.
பல நூறு கோடி நரம்பு செல்களால் ஆனதுதான் மனித முளை. இவை ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு இருக்கின்றது. பிறக்கும்போது இருக்கும் நியூரான்களின் (Neurons) எண்ணிக்கை, வயதாக வயதாக படிப்படியாக குறைந்துகொண்டே வரும்.
இப்படி நியூரான்கள் குறைவதால், ஞாபக மறதி ஏற்படுவது என்பது இயல்பான ஒன்றுதான். அதுவே நியூரான்களின் எண்ணிக்கை அதிக அளவில் அழிய ஆரம்பிக்கும் போது அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய் உருவாகலாம்.
அல்சைமர் எனப்படும் அறிவாற்றல் இழப்பு அல்லது ஞாபக மறதி நோய். இது மிகவும் பொதுவான ஒரு நோய் நிலையாக இருக்கிறது.இந்தவகை மறதியானது பொதுவாக 60- 70 வயதுடையவர்களுக்கு ஏற்படும். 65 வயதிற்கு குறைவான நபர்களுக்கு மிகவும் அரிதாக காணப்படலாம். அவ்வாறு ஏற்படுவதை ஆரம்பகால அல்சைமர் என்று குறிப்பிடுகின்றனர்.
1906-ம் ஆண்டில் அலோயிஸ் அல்சைமர் என்பவரால் இந்த நோய்தாக்கம் அறியப்பட்டது. அதனாலேயே இந்நோய்க்கு அல்சைமர் நோய் என்று பெயர் வந்தது.
லேசான அல்சைமர்.
மிதமானஅல்சைமர்
கடுமையனஅல்சைமர்.
அல்சைமரால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வார்கள்.
நாள்படும்போது பேச்சில் தடுமாற்றம், தேதியும் கிழமையும் மறந்து போகும் நிலை ஏற்படும்.அல்சைமர் நோயால் பாதிக்கப்படும் மூளையின் ஒரு பகுதி ஹிப்போகேம்பாஸ் இப்பகுதி நம் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கக்கூடிய ஒவ்வொரு செயல்களையும் நினைவில் வைத்து கொள்ளும் பகுதியாகும். இதுவே அல்சைமரின்போது பாதிக்கப்படுகிறது. இதில் குறிப்பிட்டு பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நீண்ட காலத்துக்கு முன்பு நடந்தவை எதுவும் இந்நோயினால் பாதிக்கப்படுவது இல்லை.திருமண நாள், பிறந்த நாள், பெயர்கள், சமையல் செய்யும் போது அடுத்தடுத்து என்னென்ன பொருள்களை சேர்ப்பது என்பதில் மறதி என்று கூறிக்கொண்டே போகலாம்.அறிகுறிகள்எல்லாருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதில்லை வீட்டிலோ அல்லது வெளியிலோ சாதாரணமாக எடுத்த பொருள்களை எங்கிருந்து எடித்தோம்,எங்கே வைத்தோம் என்று மறப்பது தொடக்க நிலை.
தடுப்பதற்கான வழிகள் :
தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான உணவு முறை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
ஆரோக்கியமான இதய அமைப்பு, இதய நோயிலிருந்து பாதுகாத்தல் ஆகியவை அல்சைமரை தடுக்கக்கூடும்.
நீரிழிவு, உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்தல் முக்கியம்.
வாழ்நாள் முழுவதும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருத்தல் வேண்டும்.