யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் தலைமையில் இன்று(10) காலையில் இவ் நினைவேந்தல் நடைபெற்றது. படுகொலையின் ஐம்பதாவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன் போது உயிர் நீத்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தி பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் மதத் தலைவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கட்சி ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இடம்பெறது.நினைவேந்தலானது இன்று(10) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது. 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, காவல்துறையினரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.
இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதுட்டுமன்றி தமிழர்கள் மனதில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது.