லெப்.கேணல் அகிலா (நித்திலா,நிலாந்தி.)
சொந்தப்பெயர் : சோமசுந்தரம் சத்தியதேவி (சக்தி)
பிறந்த இடம்: கோப்பாய்,யாழ்ப்பாணம்.
பிறப்பு: 25/12/1969. வீரசாவு: 30/10/1995.
லெப்.கேணல் அகிலா , எங்கள் போராட்ட வரலாற்றில் அவர் ஓர் தனி அத்தியாயம்.!
ஆகாயத்தை காலால் அளக்கமுடியும் அந்த ஆழக்கடலை நுலால் அளக்கமுடியும் கரும்புலிகள் மனதை யாராலும் அளக்கமுடியாது அப்படிப் பட்ட கரும்ம்புலிகளின் விடுதலைப்புலிகளின் முதற் பெண்கரும்புலியை உருவாக்கிய பெருமை அகிலாக்காவிற்குரியதே இழப்பை நெஞ்சம் ஏற்க மறுக்கும் பெயர் கூற முடியாத சாதனைகளுக்குள்ளும், இன்னும் ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கிப்போன பல உண்மைகளுக்குள்ளும் அவர் ஆற்றிய பங்கு, அவரது உழைப்பு….. இவை அவரை இனங்காட்ட முடியாத பக்கங்கள். எழுத்திலே வடிக்க முடியாத வரலாற்று நிகழ்வுகள். ஏராளம் புலனாய்வுத்துறையின்மகளீர் சிறப்புத்தளபதியாக வலம்வந்தவர்.! அயல் நாட்டவர் தேடப்படுவோர் ,பட்டியலில் இணைக்கப்பட்டவர்.காலத்தின் தேவையால் களம் சென்றவர்.
அவரது கைத்துப்பாக்கியிலிருந்து புறப்படும் ரவைகள் எப்போதுமே இலக்குத் தவறியதில்லை. பெயர் சொல்லக் கூடிய சூட்டளார். அந்த இலக்குத் தவறாத தன்மை அவரது போராட்ட வாழ்வின் எல்லாப் பக்கங்களிலும் ஊடுருவியிருந்தது. எப்போதும்அவரது கைத்துப்பாக்கி அவரிடம் தயார் நிலையில் இருக்கும். எந்த வேலையாயினும் செய்து முடிக்கின்ற வரையில் அவரது அயராத உழைப்பு, செய்து முடிக்க வேண்டும் என்ற ஓர்மம் அவரிடம் தனித்துவமாக விளங்கியது. ஒவ்வொரு போராளியையும் சுயமாக வளர்த்தெடுப்பதில் அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் செயலாற்றலும்…….. பார்வையால் பணியவைக்கும் திறன் எங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் அவரை ஆழ இருத்தி விட்டது. எந்த வேலையாக ஓடி அலைந்து திரிந்தாலும் நித்திரையின்றிய இரவுகளைச் சந்தித்தாலும் தானே நேரம் ஒதுக்கி, போராளிகளுக்கு கல்வியூட்டிய அந்த நாட்கள்……….இவர் புலணைவுத்துறை மகளீர் அணியின் வரலாற்றை உருவாக்கிய தளபதி. பெண்போராளிகள் அனைவரும் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்ற அவரது கொள்கை எமக்கு வழிகாட்டியாக அமைந்தது.
அகிலா.! எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’ மெல்ல உயிர்ப்புக்காக உழைத்தவர்களில் லெப்.கேணல் அகிலாவின் பங்கும் அளப்பரியது. அகிலாக்கா எல்லாப் போராளிகளையும் தொட்டுச்சென்ற அவரது நினைவுகள். .அவர் இரு அக்காக்களுடனும் தங்கையோருவரும் இரு தம்பிகளும்.என நடுத்தரவசதியுடயகுடும்பத்தில் கோப்பையில் பிறந்து வளைந்தவர் பாடசாலையில் படிக்கும்காலத்தில் ஆரம்பகல்வியை கோப்பாயில்கற்று கொலசிப்பில்தெரிவாகி கொக்குவில்இந்துக்கல்லூரியில் படிப்பை தொடர்ந்தவர். வாசிப்பதில் அதிக நாட்டமுடையவர். குடும்பம் எமது போராட்டத்திற்கு பல உதவிகள் புரிந்துள்ளது. பின் லெப்.கேணல் திலீபணினால் உருவாக்கப்பட்ட ‘சுதந்திரப் பறவைகள்’ அணிக்குள் தன்னையும் இணைத்துக்கொண்டவர்.அவர் இயக்கத்துக்கென சேவையாற்ற புறப்பட்ட காலங்கள் மிக நெருக்கடியானவை. போராட்ட நடத்தி வெளியே வந்துதேசத்துக்காய் தம்மை அர்ப்பணிக்கத் தொடங்கியது. இருண்மைச் சக்திக்குள் உறங்கிக் கிடந்த மனங்களைத் தட்டியெழுப்ப அவர்கள் அல்லும் பகலும் பாடுபட்டனர். அந்த அணிக்குள் அகிலாவும் தன்னை இணைத்துக் கொண்டார்.
1987ம்வருடம்பெண்களுக்கானஇரண்டாவதுபயிற்சிபாசறை கிளாலியில் மாதவன்மாஸ்டரின் அவதானிப்பில்பயிற்சி பெற்றவர்.
முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன் மாலதியின் வீரச்சாவு இந்திய இராணுவத்திற்கு எதிரான கோப்பையில் பெண்களணியின் முதற்சண்டையில் பங்குகொண்டவர். அன்று தொட்டு இறுதிவரை தனது செயல்களினால் மட்டும் தன்னை இனங்காட்டி வந்தார். பார்வையில் ஆளுமைவெளிப்படும். அவருள் இருந்த அந்த ஆளுமை, பல்துறை விற்பன்மை, எமது தேசத்தைக் கடந்து பறந்து போன பெருமை….. அவரது தனித்துவமான இடம் நிரப்பப்பட முடியாததுதான். எப்போதுமே கால்சப்பாத்துக்களைக் கழற்றியறியாத கால்கள், நடந்துவரும் போது தனியானதொரு கம்பீரம் நடையிற் தெரியும். அந்த மெல்லிய உருவத்தின் வல்லமை, அதைவிட உறுதியின் வலிமை, இனம்கனம்முடியாத புன்சிரிப்பில் ஈர்ப்பு இருக்கும். வாகனம் ஓட்டும் லாவகம்.அகிலாவிடம்கொடுக்கப்படும் எந்தப்பணிகளிலும் தனித்தன்மை வெளிப்படுத்தும் திறமையுடையவர்.
போராளிகள் தனித்திருக்கும் வேளைகளில் பயிற்சிகள் எப்படி செய்வது அவர்கள் பயிற்சி செய்கிறார்களா? இல்லையா? என்பதுவரை அவதானிப்பார். தவறுசெய்பவரின் தவறை செய்தவரின் வாயால் வரவழைத்து விடுவார். அகிலாக்கா இருக்குமிடத்தில் கண்டிப்புடன் அரவணைப்பு சந்தோசம் எப்போதும் இருக்கும். அவரிடமிருந்த போராளிகளின் பிரச்சனைகளை அணுகும் முறை தனித்துவமானது.
இந்த வேலையை எப்படிச் செய்வது? குறித்த நாட்களுக்குள் செய்து முடிக்க முடியுமா? யோசித்து யோசித்து மண்டையைப் போட்டுக் குழப்பிப் போய் அவர் முன்னாள் நின்றால், இவ்வளவு நேரமும் இதற்காக போய் நின்றோம் என்ற மாதிரி செய்கின்ற வேலை இலகுவானதாக்கி தந்துவிடும் அறிவுரைகள். பயிற்சி முறைகள், தவறுகளுக்கு தண்டனைகள் வழங்குவதிலும் தனிச்சிறப்பை கொண்டிருக்கும். எந்தபோரளியையும் கண்சைவில் செயலாற்றவைத்துவிடும்அவரின்ஆளுமை .பயிற்சியில் கண்டிப்புடன்.தேற்சி இருக்கும்.நேரக்கனிப்புடன்.பயிற்சி இருக்கும். எந்த பணியாக இருந்தாலும் நேரம் வேகம் விவேகம் ஆளுமை,இருக்கும்.
அரவணைப்பு,கண்டிப்பு,இரண்டுமே அம்மாவை ஞாபகப்படுத்தும். .அவர் சமைத்து பார்த்தது கிடையாது. ஆனால் சுவைபார்பதில் அவரை மிஞ்சிட எவருமில்லை .குறைந்த செலவில் சத்துள்ளதாகவும் சுவையாகவும் சமையல் தெரியாதவர்களையும் சமையல் செய்ய வைத்துவிடுவார்.அப்படி அவரின்திறமைகளை அடிக்கிக்கொண்டுபோகலாம்.அகிலாக்காவின் வரலாற்றின் சில வரிகள்தான் இவை. இவள் எமுத்துக்குள்அடக்கமுடியாத காவியப்புருசி……!
எல்லா வகையான சந்தோசங்களையும் பிரமாண்டம் நிறைந்த கனவுகளையும் பறித்துக் கொண்டு போகவும் ஒரு நாள் உதிக்குமென்பதை நாம் யாரும் அறியாத ஒருநாள் அந்தக் கரிய நாள் அது சாவு காவுகொள்ளுமென்று அவரருடன் நின்ற எவரும் எண்ணியிருக்கவில்லை. இரத்தத்தால் அந்த இடம் சிவக்குமென்று சிந்தித்திருக்கவில்லை. தங்கள் உறவுகள் தங்களை இழந்து துடிப்பார்கள் என்று எதையுமே அறிந்திராத அந்த நாள் தொடர்ந்து சண்டைநடந்துகொண்டிருந்தது எறிகணைக்குண்டுகள் சரமாரியாக பறந்து வந்தது.எத்தனையோ உயிர்களை காவுகொண்டது .என்றும் முனைப்போடு வாழ்ந்த அவரின் எண்ணத்தை எறிகணை தின்று கொண்டது. சில மணித்துளிகளில் அந்தக் கோரம் நிறைந்த துயரம் நிகழ்ந்து முடிந்தது. டாங்கிகள் அவரின் உடலை கடந்து நகரத்தொடங்கின இரத்தச் சேற்றில் உயிரற்ற உடலாக அவ்விடத்திலேயே விட்டு வந்தோம்.
அன்றைய நாள் உலகமே அதிர்ந்தது வலிகாம தேசம் விடடுபட்டு பெரும் இழப்போடு யாழ் மண்ணை விட்டு மக்கள் இடம் பெயர்ந்தனர். பல துன்பங்கள் மத்தியில் யுத்தத்தின் ஓர்மம் நிறைந்த அன்றைய நாளைக் காலம் பதிவு செய்து கொண்டது. அந்தத் துயர் நிறைந்த நாளை எவராலும் மறக்க முடியாது எமக்கும்அந்த நாள் தந்து போனது.அந்த நாள் எமக்கு கரியநாளாய் எங்களது கனவுலகம் சிதைந்து போனது. இரத்தச் சேற்றில் அவளும் கிடந்தாள். அசைந்து எழுந்து ஒட எத்தனித்தாரா? உடன் உயிர் பிரிந்ததா? எதையும் சரிவரகூறும் நிலையில் எவரும் அருகில் இருக்கவில்லை அவளது ஞாபகங்களிலிருந்து எல்லா ஒலிகளும் தூரமாகிக்கொண்டிருந்தது.ஆழம் நிறைந்த வெளிகள் ஊடாகவும்….அவலம் நிறைந்த தெருக்கள் ஊடாகவும் ஏதோவொருபாரம் எங்களது சந்தோசங்களையும் வலிகளையும் தொலைத்து விட்டு அவர் போன்ற உன்னத பிறவிகளின் நினைவுகள் சுமந்து சுமைகளுடன்கோப்பாய்,செம்மணி வெளிகளை வெறுமையுடன் கால்கள் கடந்து கொண்டிருந்தது அழுகை மறைந்து அவள் குரல் அடங்கிப் போக எங்கோ எங்கோ நாம் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தோம்.லெப்.கேணல் அகிலாவின் கடைசி மூச்சு 30.10.1995ல் சூரியக்கதிர் வலிகாமத்தின் மிகப்பெரிய சமருக்குள் ஊரெழுவின் சிவப்பு மண்ணுக்குள் குருதிதோய கலந்து போனார். ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கிப்போன பல உண்மைகளை சுமந்தவர்களில் ஒருவராக என்றும் உரைக்கமுடியாத வலிகளுடன் இன்றும் நெஞ்சை விட்டகலாதநினைவுகளுடன்……!
-அன்பு-