Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இந்தியா

சென்னையில் 2023 பெருவெள்ளத்தின் கோர முகமாக இணையத்தில் இந்தக் காணொளி பலராலும் பகிரப்பட்டது. 

Stills by Stills
06/12/2023
in இந்தியா
0
சென்னையில் 2023 பெருவெள்ளத்தின் கோர முகமாக இணையத்தில் இந்தக் காணொளி பலராலும் பகிரப்பட்டது. 
0
SHARES
10
VIEWS
ShareTweetShareShareShareShare

சென்னையில் 2023 பெருவெள்ளத்தின் கோர முகமாக இணையத்தில் இந்தக் காணொளி பலராலும் பகிரப்பட்டது. திங்கட்கிழமை அதிகாலை முதல் சென்னை வெள்ளம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகத் தொடங்கிய போது, ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காணொளியும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளிக்கரணையில் பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்திற்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து அந்தக் காணொளி எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்தக் காணொளி எடுக்கப்பட்ட இடம், பள்ளிக்கரணையில் அமைந்துள்ள புரவங்கரா என்னும் தனியார் கட்டுமான நிறுவனத்திற்குச் சொந்தமான பூர்வா விண்டர்மியர் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியாகும்.

இந்தப் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். இதில் இ- பிளாக் பகுதியில் இருந்த ஒரு தடுப்புச் சுவர் உடைந்ததால் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த வெள்ள நீர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை அடித்துச் சென்றது. அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றியிருந்த பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி மற்றும் மேடவாக்கம் ஏரியிலிருந்து வெளியேறிய உபரி நீரால் அந்த குடியிருப்புப் பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. இது குறித்து அந்தக் குடியிருப்பின் இ- பிளாக் பகுதியில் வசித்து வரும் ரூபேஷ் என்பவரிடம் பேசினோம்.

“ஞாயிறு இரவு முதல் இங்கு நிலைமை மோசமாகத் தொடங்கியது. முதலில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மழை இடைவிடாமல் பெய்து கொண்டிருந்ததால் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தோம். திங்கள் கிழமை அதிகாலையில் பெரும் சத்தம் ஒன்று கேட்டது. முதல் தளத்தில் இருக்கும் என் வீட்டின் பால்கனிக்கு சென்று பார்த்தேன். அங்கு என் கண்கள் கண்ட காட்சியை நம்ப என் மனம் மறுத்தது,” என்று அந்தச் சம்பவத்தை விவரித்தார் ரூபேஷ்.

“குடியிருப்புப் பகுதியின் தடுப்புச் சுவர் உடைந்து தண்ணீர் உள்ளே வரத் தொடங்கியிருந்தது. உடனே நான் கீழ் தளத்திற்குச் சென்று அங்கு நிறுத்தியிருந்த என் இரு சக்கர வாகனத்தை அப்புறப்படுத்த முயன்றேன்.

ஆனால் தண்ணீர் மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. சில நொடிகளில் முழு சுவரும் உடைந்துவிட்டது. ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, எனது வீட்டிற்குத் திரும்பி விட்டேன். முதல் தளம் வரை தண்ணீர் வந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் இருந்தோம். இந்த குடியிருப்புப் பகுதிக்குப் பின்புறம் ஒரு பெரிய மைதானம் உள்ளது.

வெள்ள நீரால் மைதானம் நிறைந்து, தண்ணீர் எங்கும் செல்ல வழியில்லாமல் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே வந்துவிட்டது. இப்போது வரை இங்கு மின்சாரம் சரி செய்யப்படவில்லை. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள் ஒன்றோடொன்று மோதி ஆங்காங்கே கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்த அல்லது மீட்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை,” என்று கூறினார்.

அந்தக் காணொளியில் முதலில் அடித்துச் செல்லப்படும் வாகனம் என்னுடையதுதான். அதைப் பார்த்ததும் நான் அதிர்ச்சியில் உறைந்து விட்டேன்,” எனக் கூறுகிறார் இ-பிளாக் பகுதியில் வசித்து வரும் ரவி.

“அந்தக் காணொளியை நீங்கள் பார்த்தால், அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் எந்தப் பிரச்னையும் இருக்காது. அதன் தடுப்புச் சுவர் மிக உயரமானதாகவும் பலமானதாகவும் இருக்கிறது. எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் தடுப்புச் சுவர் மிகவும் பலவீனமாக இருந்தது. இது குறித்துப் பலமுறை எனது மகன் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என்று கூறினார் அதுமட்டுமின்றி, சுவர் உடைந்துவிடும் என்ற அச்சம் அங்குள்ள பலருக்கும் ஏற்கெனவே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் இதுகுறித்து குடியிருப்புவாசிகள் தைரியமாகப் பேச முன்வரவில்லை எனவும் ரவி குறிப்பிட்டார்.

“அந்தச் சுவரை பலமாகக் கட்டியிருந்தால் இத்தனை வாகனங்கள் சேதமடைந்திருக்காது. இப்போதும்கூட கட்டுமான நிறுவனத்தின் சார்பிலிருந்து எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை, குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக மட்டுமே உணவு, குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.”லேக் வியூ அபார்ட்மென்ட் எனக் கூறி விற்றார்கள், ஆனால் இப்போது குடியிருப்பு முழுவதுமே ஏரியின் மீது கட்டப்பட்டதைப் போலத்தான் உள்ளது என்றும் ரவி குறிப்பிட்டார்.

“இந்தச் சேதங்களுக்கு யார் பொறுப்பு? இவ்வளவு வீடுகளைக் கட்டுபவர்கள் ஒரு பலமான சுவரைக் கட்ட முடியாதா?” எனக் கேள்வியெழுப்பும் ரவியின் குரல் கோபமும் ஆதங்கமும் கலந்தே ஒலித்தது.

ஏற்கெனவே கட்டப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட பிளாட்டுகளில் இத்தனை சிக்கல்கள் இருக்கும்போது, மேலும் புதிதாக மூவாயிரம் பிளாட்டுகள் அருகில் கட்டப்பட்டு வருகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

“பள்ளிக்கரணை குடியிருப்புகளில் நிலைமை கொஞ்சம்கூட சரியாகவில்லை. கட்டுமான நிறுவனத்திடம் கேட்டால் எந்தப் பதிலும் இல்லை. வீட்டை விளம்பரம் செய்து விற்றுவிட்டு காணாமல் போய் விட்டார்கள். லட்சங்களைக் கொடுத்து வீடுகளை வாங்கியவர்களின் நிலை தற்போது இப்படி உள்ளது,” “குடிப்பதற்கும், வீட்டு உபயோகத்திற்கும் தண்ணீர் இல்லை. முதியோர்களும் குழந்தைகளும் மருந்து, உணவு, குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்,” என்று பெயர் வெளியிட விரும்பாத குடியிருப்புவாசி ஒருவர் தெரிவித்தார்.தேங்கியுள்ள நீரை வெளியேற்றவோ அல்லது ஆங்காங்கே பழுதாகி நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்தவோ போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், தேங்கியுள்ள வெள்ள நீரால் நோய் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் அரசிடமிருந்தோ, கட்டுமான நிறுவனத்திடம் இருந்தோ எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.”கட்டுமான நிறுவனம் நினைத்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடக்காமல் நிச்சயமாகத் தடுத்திருக்க முடியும்,” என்று உறுதிபடக் கூறுகிறார் பூர்வா விண்டர்மியல் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நபர்.

பூர்வா விண்டர்மியர் குடியிருப்போர் சங்கத்தின் துணைத் தலைவர் பாலமுரளியிடம் பேசியபோது, “கட்டுமான நிறுவனத்தின் மீதுதான் முழு தவறும் எனச் சொல்ல முடியாது. அந்தத் தடுப்புச் சுவருக்குப் பின்னால் பல ஏக்கர்களுக்கு காலி நிலம் உள்ளது.

அதிக மழை காரணமாக வெளியேறிய நீர், தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு வந்துவிட்டது. எவ்வளவு பலமான சுவராக இருந்தாலும்கூட அதைத் தடுத்திருக்க முடியாது.இப்போதைக்கு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முயன்று வருகிறோம். குடியிருப்புப் பகுதியின் சில சுற்றுச் சுவர்களை ஜே.சி.பி மூலம் உடைத்து நீரை வெளியேற்றி வருகிறோம்.

முடிந்தவரை உணவு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். மின்சாரம் இல்லாததால் குடிநீரை மேல் தளங்களுக்குக் கொண்டு செல்ல சிரமமாக உள்ளது. கட்டுமான நிறுவனத்திடம் கலந்து பேச முயற்சி எடுத்துள்ளோம். இயல்பு நிலை திரும்ப சில நாட்களாகும்,” எனக் கூறினார்.இந்தப் பிரச்னை தொடர்பாக புரவங்கரா கட்டுமான நிறுவனத்தின் திட்டப் பொறியாளரிடம் பேச முயன்றபோது அவர் கருத்து கூற மறுத்துவிட்டார்.

Tags: சென்னையில் 2023பெருவெள்ளத்தின்கோர முகமாகஇணையத்தில்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம்.!

அடுத்த செய்தி

கொழும்பில் 15ஆம் திகதி பிரம்மாண்டமாக பொதுஜன பெரமுனவின் பிரதான மாநாடு !

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவின் ‘ககன்யான்’ கனவுத் திட்டம் இறுதி ஆளில்லா சோதனையோட்டம் (G1) மாபெரும் வெற்றி!

இந்தியாவின் ‘ககன்யான்’ கனவுத் திட்டம் இறுதி ஆளில்லா சோதனையோட்டம் (G1) மாபெரும் வெற்றி!
by கண்ணன்
12/12/2025
0

ஸ்ரீஹரிகோட்டா, டிசம்பர் 12, 2025 இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் இன்று ஒரு பொன்னான நாள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ - ISRO), மனிதர்களை விண்வெளிக்கு...

மேலும்...

“வரலாறு படைக்கத் தயாராகும் இளைஞர் படை” – திருச்சியில் சீமான் தலைமையில் மாணவர் பாசறை மாபெரும் கலந்தாய்வு!

“வரலாறு படைக்கத் தயாராகும் இளைஞர் படை” – திருச்சியில் சீமான் தலைமையில் மாணவர் பாசறை மாபெரும் கலந்தாய்வு!
by கண்ணன்
11/12/2025
0

"வரலாறு படைக்கத் தயாராகும் இளைஞர் படை" - திருச்சியில் சீமான் தலைமையில் மாணவர் பாசறை மாபெரும் கலந்தாய்வு! திருச்சி: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர்...

மேலும்...

2026 தேர்தலை நோக்கி தவெக – கூட்டணி மற்றும் முதல்வர் வேட்பாளர் குறித்து அதிரடி தீர்மானங்கள்!

2026 தேர்தலை நோக்கி தவெக – கூட்டணி மற்றும் முதல்வர் வேட்பாளர் குறித்து அதிரடி தீர்மானங்கள்!
by கண்ணன்
11/12/2025
0

இடம்: பனையூர் தலைமை அலுவலகம், சென்னை. தலைமை: பொதுச்செயலாளர் என். ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) முன்னிலையில், கட்சியின் தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்...

மேலும்...

மெட்ரோ 2-ம் கட்டப் பணிகள் – முக்கிய சுரங்கப்பாதை இணைப்பு இன்று நிறைவு

மெட்ரோ 2-ம் கட்டப் பணிகள் – முக்கிய சுரங்கப்பாதை இணைப்பு இன்று நிறைவு
by கண்ணன்
11/12/2025
0

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நகரின் மிக முக்கியப் பகுதிகளை இணைக்கும் ஒரு சவாலான சுரங்கப்பாதைப் பணி இன்று...

மேலும்...

 ‘இந்தியாவில் ரூ.1.5 லட்சம் கோடி மெகா முதலீடு’ – பிரதமர் மோடியை சந்தித்த மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லா!

 ‘இந்தியாவில் ரூ.1.5 லட்சம் கோடி மெகா முதலீடு’ – பிரதமர் மோடியை சந்தித்த மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லா!
by கண்ணன்
10/12/2025
0

 'இந்தியாவில் ரூ.1.5 லட்சம் கோடி மெகா முதலீடு' - பிரதமர் மோடியை சந்தித்த மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லா! புது தில்லி: இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு...

மேலும்...

புதுச்சேரியில் இன்று TVK பொதுக்கூட்டம் கடும் பாதுகாப்பு நிபந்தனைகள், துப்பாக்கி வைத்த நபர் காரணமாக பரபரப்பு

புதுச்சேரியில் இன்று TVK பொதுக்கூட்டம் கடும் பாதுகாப்பு நிபந்தனைகள், துப்பாக்கி வைத்த நபர் காரணமாக பரபரப்பு
by கண்ணன்
10/12/2025
0

தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் விஜய் இன்று புதுச்சேரி உப்பாளம் ஹெலிபேட் மைதானத்தில் மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கரூர் கூட்ட நெரிசல் விபத்தில்...

மேலும்...
அடுத்த செய்தி
கொழும்பில் 15ஆம் திகதி பிரம்மாண்டமாக பொதுஜன பெரமுனவின் பிரதான மாநாடு !

கொழும்பில் 15ஆம் திகதி பிரம்மாண்டமாக பொதுஜன பெரமுனவின் பிரதான மாநாடு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

06/12/2025
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
சிறந்த உறக்கத்திற்கு ஏற்ற திசைகள்.!

சிறந்த உறக்கத்திற்கு ஏற்ற திசைகள்.!

12/12/2025
இந்தியாவின் ‘ககன்யான்’ கனவுத் திட்டம் இறுதி ஆளில்லா சோதனையோட்டம் (G1) மாபெரும் வெற்றி!

இந்தியாவின் ‘ககன்யான்’ கனவுத் திட்டம் இறுதி ஆளில்லா சோதனையோட்டம் (G1) மாபெரும் வெற்றி!

12/12/2025
“வரலாறு படைக்கத் தயாராகும் இளைஞர் படை” – திருச்சியில் சீமான் தலைமையில் மாணவர் பாசறை மாபெரும் கலந்தாய்வு!

“வரலாறு படைக்கத் தயாராகும் இளைஞர் படை” – திருச்சியில் சீமான் தலைமையில் மாணவர் பாசறை மாபெரும் கலந்தாய்வு!

11/12/2025
2026 தேர்தலை நோக்கி தவெக – கூட்டணி மற்றும் முதல்வர் வேட்பாளர் குறித்து அதிரடி தீர்மானங்கள்!

2026 தேர்தலை நோக்கி தவெக – கூட்டணி மற்றும் முதல்வர் வேட்பாளர் குறித்து அதிரடி தீர்மானங்கள்!

11/12/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us