லண்டன் திரையரங்குகளுக்கு வருகிறது டக் டிக் டோஸ் (Dak Dik Dos)
ராஜ் சிவராஜ் இயக்கத்தில் ஈழத்தின் கலைஞர்களின் ஒருங்கிணைந்த திரைப்படம் டக் டிக் டொஸ் லண்டன் திரையரங்குகளுக்கு வரத் தயாராகிறது.
வரும் மார்ச் மாதம் 22 ம் முதல் லண்டனின் மிகப்பிரபல்யமான Odeon சினிமா திரையரங்குகளில் ஒரே நாளில் திரையிட ஏற்பாடாகியிருக்கிறது.
ஈழத்தின் கதைக்களங்களத்தோடு முற்றுமுழுதாக ஈழத்திலேயே படமாக்கப்பட்டு முழு நீள நகைச்சுவைத் திரைப்படமான இந்த டக் டிக் டோஸ், ஈழத்தின் திரையரங்குகளில் இந்த மாத ஆரம்பத்தில் சிவராத்திரி வெளியீடாக வெளியாகி இன்றுவரை பலரையும் கவர்ந்த திரைப்படமாகும்.
தாயக வட்டார வழக்குச் சொற்களோடு உரையாடி திரைக்கதை நகர்ந்து செல்வது இந்த திரைப்படத்தின் விசேட அம்சமாகும்.
தாயகத்தை தொடர்ந்து லண்டன் Odean சினிமா திரையரங்குகளுக்கு குறித்த திரைப்படம் ஒரேநாளில் வருகிறது.
லண்டன் மாநகரத்தில் Uxbridge,Wimbledon, Greenwich, South Woodford, Streatham ஆகிய இடங்களில் அமைந்துள்ள Odeon சினிமா திரையரங்குகளிலேயே குறித்த திரைப்படம் திரையிடப்படவுள்ளது.
வெள்ளித் திரையரங்குகளில் ஒரே நாளில் லண்டனில் பல இடங்களில் வெளியாகும் பெருமையோடு Dak Dik Dos வலம் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது
பிரித்தானிய வாழ் தமிழர்கள் அனைவரையும் வெற்றிநடை போடும் இந்த ஈழத் திரைப்படத்தை பார்வையிட வருமாறு , திரைப்படத்தை திரையிடும் நுங்கு குழுமத்தினர் வேண்டிநிற்கிறார்கள்.