Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு ஈழம்

கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் மங்களேஸ்.!

Stills by Stills
08/03/2025
in ஈழம்
0
கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் மங்களேஸ்.!
0
SHARES
131
VIEWS
ShareTweetShareShareShareShare

தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் ஓய்வின்றி உழைத்த உத்தமதளபதி லெப் கேணல் மங்களேஸ்.!

இயற் பெயர்   : அரவிந்தன்,                                                                                                                  தந்தைபெயர் : பாலசுந்தரம்,                                                                                                            சொந்த இடம் : யாழ் மாவட்டம்,                                                                                                        வீ.சாவு              :  08/03/2008.

தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் சுமார் பதினெட்டு ஆண்டுகளாக ஓய்வின்றி உழைத்த உத்தமத்தளபதிதான் லெப் கேணல் மங்களேஸ் அண்ணா அவர்கள்.

1990ம் ஆண்டின் முற்பகுதிகளில் தனது பதினாறாவது வயதில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு ‘மங்களேஸ்’ என்ற நாமத்தைத் தனதாக்கிக்கொண்டு அன்றுமுதல் அவர் விழிமூடும் நாள்வரையிலும் அவர் விடுதலைக்காக ஆற்றிய பணிகள் மிக நீண்டது.

தொடக்கத்தில் ஒரு போராளி பெற்றுக்கொள்ள வேண்டிய படையப் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டு இயக்கத்தின் அப்போதய பிரதித்தலைவர் திரு மாத்தையா அவர்களின் தாக்குதலணியில் தனது களப்பணிகளை முன்னெடுத்திருந்தார். 1991ம் ஆண்டு யூலை மாதத்தில் ஆனையிறவுப் படைத்தளம் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ‘ஆகாயக் கடல் வெளி’ நடவடிக்கையில் ஒரு போராளியாகப் பங்கெடுத்திருந்தவர். அதனைத் தொடர்ந்து மணலாற்றில் சிறிலங்காப் படைகளால் முன்னெடுக்கப்பட்டிருந்த ‘மின்னல்’ இராணுவ நடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் மேற்கொண்ட எதிர்த்தாக்குதல் நடவடிக்கையிலும் தனது போராற்றலை வெளிப்படுத்தியிருந்தார் மங்களேசண்ணா.

1992ம் ஆண்டு காலப்பகுதியில் கடற்புலிகள் அணிக்கு பிரிவுமாற்றம் பெற்றுவந்த மங்களேசண்ணா வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதைத்தொடர்ந்து கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோக நடவடிக்கையின் பிரதானதளமான சாலைத்தளத்தில் நின்று விடுதலைப் போராட்டத்திற்கு வளம் சேர்க்கின்ற பலம் சேர்க்கின்ற நடவடிக்கையான ஆழ்கடல் விநியோக நடவடிக்கைகளில் திறமையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு சிறப்புத்தளபதி சூசை அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கினார்.

அவரது ஆளுமையை இனம் கண்டுகொண்ட சூசை அவர்கள் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை தளமாகக்கொண்டு செயற்பட்ட காலப்பகுதியில் மங்களேசண்ணா கடற்புலிகளின் வன்னி மாவட்டத் தளபதியாகவும் குறிப்பிட்டகாலம் செயற்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் யாழ் குடாநாடு முழுமையாக அரசபடையினரால் ஆக்கிரமிக்கப்பட்டதையடுத்து விடுதலைப்புலிகள் வன்னிப் பெருநிலப்பரப்பை தளமாகக்கொண்டு செயற்பட்ட காலப் பகுதியிலும் ஆழ்கடல் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த மங்களேசண்ணா 1996ம் ஆண்டு யூலை மாதத்தில் விடுதலைப்புலிகளால் ‘ஓயாதஅலைகள்-01’ எனப்பெயரிடப்பட்டு முல்லைத்தீவுப் படைத்தளத்தை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வெற்றிச்சமரின் போதும் படையினருக்கு உதவுவதற்காக கடல்வழியாக கடற்படையினர் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து குறித்த முல்லைப் படைத்தளம் வெற்றி கொள்ளப்படுவதற்கு மங்களேசண்ணாவின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மிகவும் காத்திரமானது.

இதன் பின்னரான காலப்பகுதியில் மணலாறு, செம்மலையைத் தளமாகக்கொண்டு செயற்பட்ட கிழக்கு மாகாணத்திற்கான கடல்வழி விநியோக அணிக்குப் பொறுப்பாளராகச் செயற்பட்ட மங்களேசண்ணா அந்த விநியோக நடவடிக்கைகளிலும் பங்கெடுத்திருந்தார். குறித்த இந்த கிழக்கு மாகாணத்திற்கான கடல்வழி நடவடிக்கையின்போது ஒரு சந்தர்ப்பத்தில் திருகோணமலை புடவைக்கட்டுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட கடற்சமரில் மங்களேசண்ணா வயிற்றுப்பகுதியில் விழுப்புண்பட்டிருந்தார். தீவிர மருத்துவச் சிகீச்சைகளின் மூலம் தேறிய மங்களேசண்ணா மீண்டும் களப்பணிகளிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

கிழக்குமாகாண விநியோக நடவடிக்கையைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தைத் தளமாகக்கொண்டு இந்தியா, தமிழ்நாட்டிலிருந்து எமது போராட்டடத்திற்குத் தேவையான மருந்துப் பொருட்கள் உபகரணங்கள் மற்றும் ஏனைய மூலவளங்களையும் கடல்வழியாகத் தாயகத்திற்குக் கொண்டுவந்து சேர்க்கின்ற உயரிய பணிகளையும் செவ்வனே செய்திருந்தார் மங்களேசண்ணா.

ஆழ்கடல் நடவடிக்கை கிழக்கு மாகாணத்திற்கான கடல் நடவடிக்கை மன்னார் – தமிழ்நாடு கடல்நடவடிக்கை என அனைத்து சவால்கள் நிறைந்த கடல் நடவடிக்கைகளிலும் பங்குகொண்டிருந்த மங்களேசண்ணா அந்த நடவடிக்கைகளில் பல கடற்சமர்களையும் கண்டிருந்தார்.

ஆனையிறவுப்படைத்தளத்தின் வெற்றிக்கு திறவுகோல்களாக அமைந்திருந்தன.
ஆனையிறவுப் படைத்தளத்தை வெற்றிகொள்வதற்காக 26.03.2000 அன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்பு தரையிறக்கத்தின் போது வெற்றிலைக்கேணியைத் தளமாகக்கொண்டு தரையிறங்க வேண்டிய அணிகளை படகுகளில் ஏற்றி அனுப்புகின்ற பிரதான பொறுப்பாளராக மங்களேசண்ணா தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

லெப் கேணல் பாக்கியண்ணாவின் உதவியோடு தரையிறங்கவேண்டிய ஆயிரத்துஇருநூறு போராளிகளையும் குறித்தநேரத்திற்குள் படகுகளில் ஏற்றி அனுப்பிவைத்து குடாரப்பு தரையிறக்க நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு மங்களேசண்ணாவின் அர்ப்பணிப்பும் உழைப்பும் மிகவும் முக்கியமானது.

கடற்லிகளின் துணைத் தளபதியாகவும் பின்பு தரைத்தாக்குதல் பிரிவில் படையணித் தளபதியாகவும் சிறந்த ஒரு தளபதியாக பணியாற்றிவர்.

கடற்புலிகள் அணியினில் இணைந்ததிலிருந்து தனது கடமைகளின் ஊடாக படிப்படியாக உயர்ந்து போராளிகளின் மனதினில் இடம்பிடித்ததோடு… தளபதிகளின் மனங்களிலும் பதிவாகிப் போனதால் அவருக்குரிய தகுதிகளும் அவரைத் தேடியே வந்தது.

2000 ஆம் ஆண்டளவில் ஆணையிறவுப் பெருந்தளத்தை கைப்பற்ற குடாரப்புத் தரையிறக்கமே… வழி சமைதுதது. அந்த குடாரப்புத் தரையிறக்கத்தை பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவின் தலைமையிலான 1200 போரளிகளை எந்தவிதமான இழப்புக்களுமின்றி மிகவும் விவேகமாகவும்… நிதானமாகவும்… வெற்றிகரமாகத் தரையிறக்கம் செய்த கடற்புலிகளின் தளபதியே இவராவார்.

சிறிலங்கா படையினரின் தொலைதொடர்பினை விடுதலைப்புலிகள் இலகுவில் ஓட்டுகேட்டு கொள்கிறார்கள் என்பதை உணர்ந்த சிறிலங்கா அரசு வெளிநாடு ஒன்றில் இருந்து ( பாகிஸ்தான்)நவீன ரக தொலைத்தொடர்பு கருவிகளை கொள்வனவு செய்து களமுனையில் படையினரின் செயற்பாட்டுக்காக பயன்பாட்டில் விட்டிருந்தது.இது ஒட்டுகேட்பது கடினமானதுதான்.ஆரம்பத்தில் இதனை உடறுத்து ஒட்டுகேட்பது என்பது முடியாததாகவே இருந்தது.

எனினும் குறிப்பிட்ட காலத்துக்குள் விடுதலை புலிகள் இதனையும் வெற்றி கொண்டு அதன் தொழில்நுட்பத்தை கண்டறிந்து அதற்கேற்ப வகையில் ஓட்டு கேட்க துவங்கினார்கள்.அதனை எவ்வாறு கண்டறிந்தார்கள் என்றால்,பாகிஸ்தான் வழங்கியிருந்த தொலைத்தொடர்பு கருவியினை சிறிலங்கா படையினர் விடுதலைபுலிகளின் கட்டுபாட்டு பகுதிக்குள் இருந்து பயன்படுத்த தொடங்கினார்கள்.அதாவது சிறிலங்கா படையின் ஆழ உடுருவும் படையினர் விடுதலைபுலிகளின் நிர்வாக பகுதிகளுக்குள் வந்து தாக்குதலை நடத்தும் போது,இவ்வாறு ஓட்டுகேட்க்க முடியாத கருவிகளை பயன்படுத்த தொடங்கினார்கள் இந்த நிலையில் ஆழ உடுருவும் அணியின் தாக்குதல் ஒன்றினை வவுனியா புளியங்குளம் பகுதிக்கு அண்மையாக விடுதலைப்புலிகள் முறியடித்து இருந்தனர்.

இதன்போது ஆழ உடுருவும் படையினரின் சடலம் ஒன்று வெடிபொருட்கள் என்பனவற்றுடன் பாகிஸ்தான் வழங்கிய புதிய தொலைத்தொடர்பு கருவியும் புலிகள் வசம் வந்து சேர்ந்தது.அதனை பார்த்தபோது புலிகளுக்கு ஆச்சரியமாகி போனது,ஏனெனில் நவீன தொலைத்தொடர்பு கருவி என்று சிறிலங்காவிற்கு பாகிஸ்தான் வழங்கிய அந்த தொடர்பாடல் கருவிகளை சிறிலங்கா பாவனைக்கு கொண்டுவருவதற்கு முன்னரே விடுதலைப்புலிகள் தமது பாவனையில் வைத்திருந்தனர்.உடனடியாக அதன் தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டு ஒட்டுகேட்க முடியாது என்று கருதிய பாகிஸ்தான் தொடர்பாடல் கருவியில் உரையாடிய படையினரின் உரையாடல்களையும் போராளிகள் ஒட்டுகேட்க தொடங்கினார்கள்.

இதேவேளை தென்னிலங்கையில் தாக்குதலுக்கான பொருட்கள்,நகர்வுகள், மன்னார் கடல்வழியாகவே நகர்த்த படுகின்றன.என ஏற்கனவே பார்த்திருந்தோம் கேணல் சாள்ஸ் அவர்களின் வீரச்சாவுக்கு பின் மங்களேஸ் அவர்களிடம் சில பணிகள் கொடுக்கபடுகின்றன.இதனைவிட இவர் திருக்கேதீஸ்வரம் கட்டளைத்தளபதியகவும் செயற்பட்டு கொண்டிருந்தார்.இவரது முதன்மையான கட்டளை மையம் அடம்பன் மாகவித்தியலத்திற்கு அருகாமையில் காணப்பட்டது.கடற்புலி போராளிகளை வைத்தே திருக்கேதீஸ்வரம் பகுதி எதிர்த்தாக்குதல் நடைபெறுகிறது.இவருக்கு கீழ்தான் பொறுப்பாளர் காதர் அவர்களும் செயற்பட்டு கொண்டிருக்கிறார்.

இவ்வாறுதான் அன்று திருக்கேதீஸ்வரம் பகுதியில் விடுதலைபுலிகளின் காவலரண் ஒன்றை எதிரி கைப்பற்றி விட்டான்.இதில் போராளிகள் பலர் வீரச்சாவு அடைகின்றார்கள்.இக்காவலரண் மீட்பதுக்கான தாக்குதலை விடுதலைப்புலிகள் நடத்தி மீட்கிறார்கள்.இதன்போது விடுதலைபுலிகளின் காவலரணில் நின்ற சிறிலங்கா படையினர் சில நரிவேலைகளை செய்திருந்தார்கள்.காவலரண் முன் சிறிலங்கா படையினருக்கு வைத்த மிதிவெடிகளை சிறிலங்கா படையினர் எடுத்து அந்த காவலரணில் வாசல்கள் ,உள்வந்து இருக்கும் இடம் அதற்க்கு பின்புள்ள விடுதலைப்புலிகள் நடமாட்ட பாதை போன்ற இடங்களில் புதைக்கிறார்கள்.புலிகளின் நடமாட்ட பாதையில் சிறிலங்கா படையினர் புதைத்துவிட்டு போன மிதிவெடியில் மங்களேஸ் கால் வைக்கிறார்.மிதிவெடியில் கால்பட்டு கீழே விழும்போது,அருகில் புதைத்து வைக்கபட்டிருந்த இன்னொரு மிதிவெடியில் உடம்பு விழ அதுவும் வெடிக்க லெப்.கேணல் .மங்களேஸ்  அந்த இடத்துலயே வீரச்சாவை தழுவி கொள்ளுகிறார்.

 

Tags: லெப் கேணல் மங்களேஸ்உத்தமதளபதி
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

திருமலை பட்டணமும் சுழலும் 5,226 ஏக்கர் நிலம் துறைமுக அதிகார சபை வசம் – குகதாசன் எம்.பி

அடுத்த செய்தி

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு சர்வதேசத்தின் தலையீடு வேண்டும்-அருட்தந்தை மா.சத்திவேல்.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!
by கண்ணன்
03/01/2026
0

சென்னை: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்தில், காயமடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பார்த்த 'மருத்துவப் பிரிவு ' (Medical Wing) பற்றிய...

மேலும்...

ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும்நிகழ்வு லண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா

by அரவிந்த்
31/12/2025
0

ஞானதீபம் கலைவிழா: ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும் நிகழ்வுலண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா ஈழத்தமிழர்கள் தமது கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டைப்...

மேலும்...

கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள்- வலுக்கும் கண்டனம்

by அரவிந்த்
22/12/2025
0

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரைக்கு முன் இடம்பெற்ற போராட்டத்தில்  நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதற்கு சைவ மகா சபை  கண்டனம்...

மேலும்...

தமிழ்த்தேசிய பேரவை எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு!

தமிழ்த்தேசிய பேரவை எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு!
by Stills
19/12/2025
0

நேற்று வியாழக்கிழமை (18) தமிழக முன்னாள் முதலமைச்சரும்  தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான  சந்திப்பு அவரது இல்லத்தில் இரவு...

மேலும்...

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களின் 19-ம் ஆண்டு நினைவு நாள் – ஒரு வரலாற்றுப் பார்வை

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களின் 19-ம் ஆண்டு நினைவு நாள் – ஒரு வரலாற்றுப் பார்வை
by கண்ணன்
15/12/2025
0

டிசம்பர் 14, 2025 தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியரும், இராஜதந்திரியுமான 'தேசத்தின் குரல்' அன்டன் பாலசிங்கம் அவர்களின் 19-ம் ஆண்டு நினைவு நாள் இன்று...

மேலும்...

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்
by Stills
28/11/2025
0

இயக்கப்பெயர்  :-பொட்டு அம்மான் சொந்தபெயர்    :-சண்முகநாதன் சிவசங்கர் பிறப்பு                  :- 28.நவம்பர்.1962 இறப்பு   ...

மேலும்...
அடுத்த செய்தி
தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு சர்வதேசத்தின் தலையீடு வேண்டும்-அருட்தந்தை மா.சத்திவேல்.!

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு சர்வதேசத்தின் தலையீடு வேண்டும்-அருட்தந்தை மா.சத்திவேல்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

03/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

02/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

01/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.