“கல்லாமை இல்லாமை ஆக்குவோம் தோழி”
நாடு விட்டு நாடு ஓடி தப்பிய வேளை
உணவு இல்லை, உடை இல்லை, உறைவிடம் இல்லை!!!
புதிய இடம் புண் பட்டது மனம். மதியை வளர்க்க மனதில் உறுதி இல்லா நிலை.
அப்போது ஒரு தலைமுறையினரின்
கல்வியோ கேள்விக் குறியானது…! அத்திப்பூத்தால் போல், அங்கொன்றும்,
இங்கொன்றுமாய் நாம் அறிவு பெற்ற காலம் அது.
கல்வி ஏக்கத்தோடு காலங்கள் கடந்தது. பின்பு அடுத்த தலைமுறை உருவானது. அனைவரையும் பள்ளிக்கு அனுப்பி அழகு கண்டனர்.
அரசு பள்ளியிலும், ஆங்கிலப் பள்ளியிலும் படித்துப் பலர் பட்டம் பெற்றனர். கல்வித் தாகத்தையும் தனித்துக் கொண்டனர்.
நாமும் கற்றதை கற்பித்து கல்லாமை இல்லாமை ஆக்குவோம் தோழியே..!
அன்புடன்
– அபிராமி கவிதன்.