நேற்று வெள்ளிக்கிழமை (17) கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போகஹ சந்தி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு வடக்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவிற்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இராஜகிரிய மற்றும் அங்கொடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 32 மற்றும் 45 வயதுடையவர்கள் ஆவர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து 55 கிராம் 550 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 80,000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மற்றைய சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 730 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இவர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.