.அண்ணாமலை ஜூலை 28ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொள்கிறார். நடை பயணத்தை ராமேஸ்வரத்திலிருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். என் மண் என் மக்கள் என நடை பயணத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது
ஆறு மாத காலம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சென்னையில் ஜனவரி மாதம் அண்ணாமலை நடை பயணத்தை நிறைவு செய்கிறார்.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டால் அது எதிர் தரப்புக்கு சாதகமாய் அமையும் என்பதால் இதை சரி செய்தே ஆகவேண்டும் என்று டெல்லி தலைமை நினைக்கிறதாம்.அண்ணாமலையின் நடை பயண தொடக்க நிகழ்ச்சிக்கு வரும் அமித்ஷா அப்போதே எடப்பாடி பழனிசாமியையும், அண்ணாமலையையும் இணைத்துவிட்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடைபயண தொடக்க விழாவில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக சார்பாக நடை பயணத்தைத.மா.கா சார்பாக ஜிகே வாசன், ஐ.ஜே.கே சார்பாக பாரிவேந்தர், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, இந்திய ஜனநாயக கல்வி உரிமைக் கழகம் தேவநாதன் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக சார்பாக யார் கலந்துகொள்வார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
அதிமுகவுக்கும் பாஜக அண்ணாமலைக்கும் கடந்த சில மாதங்களாக ஏழாம் பொருத்தமாக இருந்தது. கூட்டணியில் நீடிக்கும் அதிமுகவையும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தனர். அண்ணாமலை ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை அவமதிக்கும் சம்பவங்களும் நடைபெற்றன.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநிலத்தில் நிலைமை இப்படியிருக்க தேசிய தலைமையோ எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு அழைத்து சமாதானப்படுத்தி கூட்டணியை உறுதி செய்தது.இனி ஒருவொருக்கொருவர் மோதிக்கொள்ளாமல் இருவரும் இணைந்து திமுகவை தாக்க முயல்வார்கள் என் எதிர்பார்க்கபடுகிறது.