காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் 24 வயது அண்ணன் தனது 14 வயதுடைய தங்கையை கர்ப்பமாக்கியதால் பொலிஸாரினாகாத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.ஏஸ்.ஏம்.ஏ.றஹீம் கைது செய்யப்பட்டுள்ளார்.ஐந்து மாத கர்ப்பிணியான பாடசாலை மாணவியான தங்கை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கைதான சந்தேக நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகரீகம் தொடங்கிய காலத்திற்கு முன்பு இருந்தே பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்ச்சியாக நடைபெற்றுத்தான் வருகிறது. ஆனால் சமீபகாலமாக பள்ளி சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளின் எண்ணிக்கை முன்பைவிட பலமடங்கு அதிகமாகி கொண்டிருக்கிறது.வீட்டில் இருந்தால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு என்று பலரும் புலம்பிவரும் நிலையில், வீட்டில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உறுதி செய்யும் சில சம்பவங்களும் அரங்கேறிக்கொண்டும் வருகிறது.