இரத்த அழுத்தமானது இயல்பு நிலையை மீறி செயல்படும்போது, உடலில் உள்ள எல்லா பாகங்களுக்கும் ரத்தம் செல்லுவது தடைப்படக்கூடும். அல்லது அது செல்லும் விகிதம் குறையலாம். இது நாள்படும்போது ரத்த அழுத்த குறைபாடாக மாறும்.இரத்த அழுத்தத்தில் நாம் காட்டும் அலட்சியம் மிகப்பெரிய வாழ்நாள் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.
ஒருமுறை என்னை காணவந்த 45 வயது நிரம்பிய ஒருவருக்கு பரிசோதனையில் உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரிய வந்தது. அவருக்கு உரிய மருந்து மாத்திரைகளை பரிந்துரைத்தேன். மேலும் நான் கூறும் வரை அவற்றை நிறுத்த கூடாது என்றும் அறிவுறுத்தினேன். ஆனால் அவர் பின்பற்றவில்லை. இதனால் ரத்த அழுத்தத்தில் ஆரம்பித்த அவரின் பிரச்னைகள், அவரின் உடலில் பல சிக்கல்களை ஏற்படுத்தி அவருக்கு பக்கவாதம் ஏற்படும் அளவிற்கு ஆபத்தில் கொண்டு போய் சேர்த்தது. இது எப்படி சாத்தியம்? சொல்கிறேன்.
சமீபத்திய ஒரு புள்ளிவிவரத்தில், இளம் வயதில் 100ல் 10 பேருக்குக் குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) உள்ளது என்றும் வயது கூடும்போது பாதிக்கப்படுவோர் சதவீதம் கூடுகிறது என்றும் தெரியவந்துள்ளது. இந்தளவுக்கு அதிகம் பேருக்கு பாதிப்பு ஏற்படுவதன் பின்னணி என்ன்? ரத்த அழுத்தம் என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகின்றது? அதற்கான காரணிகள் என்ன? இவற்றை நமக்கு விரிவாக பார்ப்போம்.
1)120/80 என்று ரத்த அழுத்த அளவு இருக்கவேண்டும். சத்தான உணவு முறை, ஆரோக்கிய உணவு பழக்கம், உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுதல், இதயத்திற்கு ஆபத்து விளைவிக்காத வாழ்வியல் பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் மூலம் இயல்பு நிலை ரத்த அழுத்தத்தை தக்கவைத்து கொள்ளலாம்.
2)ரத்த அழுத்தம் அதிகரித்த நிலை:
சிஸ்டாலிக் அழுத்தம்: 120-129 என்றும்
டயஸ்டாலிக் அழுத்தம் : 90 க்கு மேல் என்றும்
தொடர்ந்து நீடிக்கும். முறையாக கவனிக்காவிட்டால், இது ரத்த கொதிப்புக்கான அபாயத்தை உண்டாக்கும். அப்படியான பட்சத்தில், இருவகையான ரத்தக் கொதிப்பு ஏற்படலாம்.
3) ரத்தக் கொதிப்பு நிலை 1:
சிஸ்டாலிக் அழுத்தம்: 130-139 என்றும்
டயஸ்டாலிக் அழுத்தம் : 90 க்கு மேல் என்றும்
இருக்கும்.
மருத்துவரின் ஆலோசனையுடன் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவர்களுக்கு இதய நோய், பக்கவாதம் போன்றவையும் ஏற்படலாம் என்பதால் மருத்துவ அறிவுரை கட்டாயம் தேவை.
4) ரத்தக்கொதிப்பு நிலை 2:
சிஸ்டாலிக் அழுத்தம்: 140
டயஸ்டாலிக் அழுத்தம் :90
என்று அதிகமாக இருக்கும். இதற்கும் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். இசிஜி எக்கோ பரிசோதனை செய்வது கட்டாயம்.
– இதயமானது ரத்தத்தை உள்ளிழுக்கும் அழுத்தத்திற்கு சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் எனப்பெயர்
– இதயமானது ரத்தத்தை வெளித்தள்ளும் அழுத்தத்திற்கு டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் எனப்பெயர்
அழுத்தம் என்பது என்ன?
ரத்தக்குழாய்களில் ஓடும் ரத்தமானது அதன் உள்சுவரின் மீது ஏற்படுத்தும் அழுத்தத்தினையே ரத்த அழுத்தம் என்று கூறுகிறோம்.
ரத்த அழுத்தத்தில் இயல்புநிலை என்பது 120/80. இதில் 120 என்பது சிஸ்டாலிக், 80 என்பது டயஸ்டாலிக். இந்த இயல்புநிலை, வயதைப் பொறுத்து மாறுதலுக்கு உள்ளாகிறது. எடுத்துக்காட்டுக்கு 10 முதல் 19 வயதுக்கு உள்பட்ட இளம் வயதினருக்கு சிஸ்டாலிக் அழுத்தம் 120 முதல் 136 வரையிலும், டயஸ்டாலிக் அழுத்தம் 82 முதல் 86 வரையிலும் இருப்பது இயல்புநிலையாக கருதப்படும்.
ரத்த அழுத்தமானது இயல்பு நிலையை மீறி செயல்படும்போது, உடலில் உள்ள எல்லா பாகங்களுக்கும் ரத்தம் செல்லுவது தடைப்படக்கூடும். அல்லது அது செல்லும் விகிதம் குறையலாம். இது நாள்படும்போது ரத்த அழுத்த குறைபாடாக மாறும
ரத்த அழுத்தத்தால் ஏற்படகூடிய ஆபத்துகள் என்ன?
முறையான மருத்துவ பரிந்துரையுடன் ரத்த அழுத்தத்தை கவனிக்காவிட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு
– டிமென்ஷியா என்படும் மறதி நோய்
– மாரடைப்பு அல்லது பக்கவாதம்
– இதயம் செயலிழப்பது
– ரத்தத் தமனி விரிவடைதல்
– சிறுநீரகக் கோளாறுகள்
– பார்வைக் கோளாறுகள்
– மெட்டபோலிக் சிண்ட்ரோம்
– சிந்தனையில் தடுமாற்றம்
போன்றவை ஏற்படலாம். ஆகவே ரத்த அழுத்தம்தானே என அலட்சியமாக இருக்கவேண்டாம். உரிய மருத்துவ வழிமுறைகளை பின்பற்றவும்”
5) உயர் ரத்த அழுத்த நிலை:
இவர்களின் ரத்த அழுத்தம் திடீரென்று 180/120க்கு மேலாகச் செல்லும். இந்நிலையில் உடல் உறுப்புகள் சேதமடையும் ஆபத்து உண்டு. நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், முதுகு வலி, பதபதப்பு, அதீத தளர்ச்சி, பேசுவதில் சிரமம், பார்வைக் கோளாறு போன்றவை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதய நோய் ஏற்படுத்தும் முக்கிய ஆபத்து காரணியாக சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் உள்ளது. பெரும்பாலானவர்களுக்கு, பெரிய தமனிகளின் விறைப்புத் தன்மையின் காரணமாக வயதுக்கு ஏற்ப சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் சீராக உயர்கிறது.
இதன் காரணமாக ரத்தக் கட்டிகள், இதய நோய்கள், வாஸ்குலர் நோய்கள் போன்றவை உருவாகும் சாத்தியக்கூறுகள் அதிகம். அதிகரித்த சிஸ்டாலிக் அல்லது டயஸ்டாலிக் ரத்த அழுத்த அளவீடுகளை கொண்டு, உயர் ரத்த அழுத்தத்தை நாம் கண்டறியலாம். அப்படி கண்டறியும்பட்சத்தில், தகுந்த மருத்துவ ஆலோசனையை விரைந்து பெறுவது அவசியம்.
- புகைபிடித்தல்
- உடல்பருமன்
- அதிக அளவிலான உப்பு (தென்னிந்திய உணவுகளில், குழம்பில் 5 கிராம் உப்பு மட்டுமே சேர்ப்பது நல்லது)
- குடிப்பழக்கம்
- உடல் செயல்பாடு குறைவு
- மன அழுத்தம்
- சிறுநீரக நோய்கள்
- நீரிழிவு நோய்
- மரபுவழி காரணங்கள்போன்றவை ஏற்படலாம். ஆகவே ரத்த அழுத்தம்தானே என அலட்சியமாக இருக்கவேண்டாம். உரிய மருத்துவ வழிமுறைகளை பின்பற்றவும்”