எங்கட பெடியலும்
என்ரை பெடியனும்.
ஒரு படத்தை இயக்கினமாம், நடிச்சமாம், இசை அமைத்தமாம், வெளியிட்டமாம் எண்டு இல்லாது அதே ரீம் அப்படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வரைக்கும் வேலை செய்ராங்க எண்டால் அது ஈழத்து சினிமால மட்டுமே..
டக் டிக் டோஸ்
கதையின் நாயகன் திலக்சன் இன் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் அற்புதம்.
அடிச்சுப்போட்டாங்க….
குழந்தை பாத்திரம் ஏற்றிருக்கும் அந்த நபரின் நடிப்பு வேற லெவல் அப்படியே குழந்தைபோல் படம் முழுவதுமாக வந்து செல்கின்றார்.
மாமா ஒர் யோகி பாபுதான்
முத்துமணிமலை பாடல்காட்சி, பொம்பிளை வேடம், எதிர்பார்புடனான நகைச்சுவைகள் படத்தில் மாமாவை ஒர் யோகிபாபு ஆக்கியுள்ளது
வட்டி மணியின் திருமண மேடைக்காட்சியில் என் வகுப்பு நண்பனும் படக்குழுவின் ஒருவருமான நண்பர் சங்கரும் வந்து செல்றார்
ஆதியின் மிடுக்கான தோற்றம் வனசங்கள் மற்றும் நகைச்சுவை காட்சிகள் சிறப்பு
மதீசனின் பின்னணி இசை பாடல்கள் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது என்றும் சொல்லலாம்
நகைச்சுவையூடாக சமகாலகாலத்தில்
இடம்பெறும் நிகழ்வுகளால் ஏற்படும் நிலைகள் எவை எவை என்பதை மிக சிறப்பாக இயக்குனர் காட்டியுள்ளார்.
ரசிக்கவைக்கும் அளவிற்கு அப் படக்குழுவின் செயற்பாடுகள் காணப்படுவதுடன்
படம் மிக சுவாரசியமாகவும் அடுத்த கட்ட எதிர்ப்பார்ப்புக்களையும் நோக்கி செல்லும் தருணத்தில் வட்டி மணியின் கல்யாண நிகழ்விற்காக உடுப்புக் கடையில் இடம்பெற்ற காட்சி அமைப்புக்கள் நகைச்சுவையாக இருந்தாலும் அக் காட்சி அமைப்புக்கள் சற்று நீண்ட காட்சிகளாக்கப்பட்டமை சற்று அவ் விடத்திலும் மற்றும் ஆரம்பத்தில் மனநலகாப்பக அதிக நகைச்சுவைகளும் ஒர் குறைநிலைப்பாடாக இருந்தாலும்
பூவன் மீடியா பெட்ரோல் செட் போன்ற வலைத்தளத்தினூடான நிகழ்வுகள் மூலம் பலருக்கு பரீட்ச்சயமான முகங்களை
வைத்து தயாரிக்கப்பட்ட அவர்களின் இரண்டாவது படமான டக் டிக் டோஸ் அனைவரையும் ஈர்த்துள்ளது…
சின்ன பெடியல் பெரிய வேலை செய்றாங்க.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்