இன்று (22)மின்சாரக் கட்டணத் திருத்தம் கலந்துரையாடுவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூடவுள்ளது. அண்மையில் இலங்கை மின்சார சபை கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்கியது. மூன்று வாரங்களுக்கு பிரேரணை பகிரங்கப்படுத்தப்படும். அதன்பிறகு பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும்.அதன் பின்னர் அனைத்து முன்மொழிவுகளையும் இணைத்து புதிய பிரேரணை இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துகளைப் பெற்ற பிறகு, பயன்பாட்டு ஆணைக்குழு தனது கருத்துக்களைச் தெரிவிக்கும்.
பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !
கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக் குள்ளாகி உயிரை...
மேலும்...