கேரளா மாநிலத்தில் பரவி வரும் ஜே.என்.1 என்ற புதிய உருாமறிய கொவிட் தொற்று மாறுபாடு ஏற்கனவே இலங்கையில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தேர தெரிவித்துள்ளார்.
லக்ஸம்பர்க்கில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஜே.என்.1 என்ற புதிய உருாமறிய கொவிட் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது.ஒமிக்ரோனின் துணை வகையாகக் கருதப்படும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 2,669 ஆக உள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தில் வேகமாகப் பரவிய உள்ளது. தற்போது கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கும் பரவியுள்ளதாக கூறப்படும் நிலையிலேயே அவர் இது தொடர்பில் தனது எக்ஸ் கணக்கில் இதனைப் பதிவிட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டு உருவான கொரோனா அலை பெரும் கலக்கத்தை உண்டாக்கியது. அதன்பிறகு ஏற்பட்ட இரண்டாவது அலையில் ஏராளமான உயிரிழப்புகள் பதிவாகின. இதிலிருந்து மீண்டு வருவதற்கு ஓராண்டிற்கும் மேல் ஆகிவிட்டது. இதற்கிடையில் கொரோனாவின் உருமாறிய வைரஸ்கள் பரவத் தொடங்கின. இருப்பினும் எதுவுமே பெரிய அளவில் அலையை உருவாக்கவில்லை. இந்நிலையில் தான் ஜே.என்.1 என்ற புதிய உருமாறிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் ஏற்கனவே கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வரும் சூழலில், ஜே.என்.1 பாதிப்பு சற்று பதற்றத்தை கூட்டியுள்ளது. இது வீரியமிக்கதாக வேகமாக பரவக் கூடியதாக இருக்கிறது. எனவே இதுபற்றி பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இந்நிலையில் பிரபல வைரலாஜிஸ்ட் டாக்டர் ஜேக்கப் ஜான் முக்கியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது, ஒமிக்ரான் வைரஸின் உருமாறிய மாதிரி தான் ஜே.என்.
ஒமிக்ரானில் இருந்து உருமாறிய வைரஸ்கள் அனைத்துமே அதிவேகமாக பரவக்கூடியவை. எனவே கேரள மாநிலம் சற்று உஷாராக இருக்க வேண்டும். போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர் திரும்பும் மக்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுதான் புதிய உருமாறிய வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் தான் அனைத்து விதமான வைரஸ்களும் பரவும்.
அதில் ஜே.என்.1, ப்ளூ உள்ளிட்டவற்றை சொல்லலாம். எனவே அதிகப்படியான பரிசோதனைகள் என்பது அவசியம். ஒமிக்ரானின் அனைத்து உருமாறிய வைரஸ்களும் வீரியம் கொண்டதாக தான் இருக்கிறது. ஆகையால் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், பல்வேறு துணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு செல்லக் கூடாது.
இந்தியாவில் மீண்டும் ஒரு கொரோனா அலை உருவாகும் வாய்ப்பு குறைவு தான். தற்போதைய வைரஸ் தொற்று என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே நிகழ்கிறது. எனவே அதை கட்டுப்படுத்தினாலே போதும். ஜே.என்.1 வைரஸ் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருந்து குணமானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பர். அதுமட்டுமின்றி தடுப்பூசியும் போட்டிருப்பர்.
இவை அனைத்தும் பெரிய அளவில் வைரஸ் பரவலை தடுத்து வருகிறது. வேண்டுமெனில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போட நடவடிக்கை எடுக்கலாம் என்று ஜேக்கப் ஜான் தெரிவித்தார். கேரளாவை சேர்ந்த 75 வயது நபருக்கு ஜே.என்.1 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் மாண்டியாவில் உள்ள MIMS மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். வயிறு மற்றும் குடலில் பிரச்சினை இருப்பதாக கூறியிருக்கிறார்