நேற்று(09)யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அனுமதியின்றி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததோடு, தம்மை அச்சுறுத்தியதாக வைத்தியர் த. சத்தியமூர்த்தி முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ். மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாண வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ். பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். முன்னர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியராக கடமையாற்றும் போது மன்னார் வைத்தியசாலைக்குள் பிரவேசித்து வைத்தியசாலையின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக மன்னார் வைத்தியசாலையின் பணிப்பாளர் மன்னார் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.அப்போது, இராமநாதன் அர்ச்சுனா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மன்னார் வைத்தியசாலையில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் இராமநாதன் அர்ச்சுனா மன்னார் வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து இடையூறு விளைவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ். மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் வாக்குமூலத்தில் நான்சுகாதாரத் தொண்டர்களின் கடிதம் மூலமாக அழைப்பின் பேரிலேயே வைத்தியசாலைக்குச் சென்றேன். சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதாக உறுதியளித்து ஏமாற்றியுள்ளார்.
மூன்று வருடங்கள் பணியாற்றியவர்களுக்கு ஐந்து மாதங்கள் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத் தொண்டர்கள் எனக்கு முறைப்பாடு செய்தார்கள். அதன் பிரகாரமே நான் வைத்தியசாலைக்குச் சென்றேன்.நாடாளுமன்ற உறுப்பினரும், வைத்தியருமான இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
.