Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு மருத்துவம்

இருமல் சளி போக்கும் மூன்று முத்திரைகள்.!

Stills by Stills
17/10/2025
in மருத்துவம்
0
இருமல் சளி போக்கும் மூன்று முத்திரைகள்.!
0
SHARES
12
VIEWS
ShareTweetShareShareShareShare
இருமல் மற்றும் சளி போக்கும் முத்திரைகள் பற்றி பார்க்கலாம். சளி, இருமலை முன்னர் யாரும் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. சளிக்கென்று வீட்டு மருத்துவம் செய்து கொண்டு சளியை சரி பண்ணிக்கொள்வார்கள் சளிக்கு மருந்து சாப்பிட்டால் ஏழு நாட்களில் குணமாகும்.
இருமலுக்கான முத்திரை பயிற்சிகள் யாரும் செய்வது கிடையாது. அதனால் முத்திரைகளின்நன்மைகளும் பயனும் யாருக்கும் தெரிவதில்லை. முத்திரைசெய்வதனால் மனம்அமைதி பெறும். ஒழுக்கம் மேம்படும்.ஆரோக்கியம்அதிகரிக்கும். எந்தபயிர்சியும் ஆறுமாதம் தொடர்ந்து செய்யவேண்டும்.
இருமல் மற்றும் சளி போக்கும் முத்திரைகள்
 சூரிய முத்திரை,ஆகாய முத்திரை,லிங்க முத்திரை போன்றவை ஆகும்
1) சூரிய முத்திரை

பஞ்ச பூத முத்திரைகளில் வலிமையான முத்திரையான சூரிய முத்திரை உடலின் வெப்பத்தை சீராக்குகிறது.

உடலில் நெருப்பு எனும் மூலகம் அதிகமாகும்போது காய்ச்சல், அதிக இரத்த அழுத்தம், இருதய நோய்கள் ஏற்படும். இந்நெருப்பாகிய மூலகம் உடலில் குறையும் போது சளி, மூச்சுத் திணறல், தைராய்டு குறைப்பாடுகள், சீரண கோளாறுகள், இதய கோளாறுகள் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உண்டு. சூரிய முத்திரை செய்வதன் மூலம் உடலின் வெப்பம் சீராக்கப்படுவதால் உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது.

சூரிய முத்திரையை செய்வது எப்படி?

சூரிய முத்திரையை காலை, மாலை என இரு வேளை, வேளைக்கு 15 நிமிடம் வரை செயயலாம். இம்முத்திரையை நடந்து கொண்டும் செய்யலாம். படத்தில் ஒரு கையால் செய்வது போல் காட்டியிருந்தாலும் இரண்டு கைகளாலும் இம்முத்திரையைப் செய்ய வேண்டும்.

  • கை விரல்களை நீட்டிக் கொள்ளவும்.
  • மோதிர விரலை மடித்து அதன் நுனிப்பகுதியை பெருவிரலின் கீழ் உள்ள மேட்டின் மீது வைக்கவும்.
  • பெருவிரலை மடித்து வைத்திருக்கும் மோதிர விரலின் மீது மெதுவான அழுத்தத்தில் வைக்கவும்.
  • மற்ற மூன்று விரல்களையும் நீட்டியவாறே வைக்கவும்.
  • முத்திரை மீது கவனம் வைக்கவும். சீரான மூச்சில் இருக்கவும்.

குறிப்பு:  காச்சல், அதிக களைப்பு உள்ள நேரங்களில் சூரிய முத்திரையைப் பயில்வதைத் தவிர்ப்பது நல்லது. கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலங்களில் சூரிய முத்திரையைத் தவிர்க்கவும்.

சூரிய முத்திரையின் பலன்கள்
  • உடலின் வெப்ப அளவை சீராக்குகிறது.
  • சளியைக் கரைக்கிறது.
  • இருமலைப் போக்குகிறது.
  • குறைவான தைராய்டு சுரப்பு கோளாறுகளை நீக்க உதவுகிறது.
  • சீரண மண்டலத்தின் செயல்பாடுகளை சீராக்குகிறது.
  • இதயத்தைப் பலப்படுத்துகிறது.
  • மூச்சுத் திணறல், ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகளைப் போக்க உதவுகிறது.
  • வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது
  • அதிகக் கொழுப்பைக் கரைக்கிறது.
  • தொப்பையைக் குறைக்க உதவுகிறது.
  • மன இறுக்கத்தைப் போக்குகிறது.
2) ஆகாய முத்திரை

பஞ்ச பூத முத்திரைகளில் ஒன்றான ஆகாய முத்திரை அற்புதமான பலன்களைத் தரக் கூடியது. தியானத்துக்கு மிகவும் உகந்த முத்திரைகளில் ஆகாய முத்திரை குறிப்பிடத்தக்கது    .

உடலில் ஆகாயம் என்னும் மூலகம் அதிகமாகும் போது அகங்காரம் அதிகமாதல், மன உறுதி குன்றுதல், நிலையற்ற மனம் மற்றும் அமைதியின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படலாம. ஆகாயம் என்னும் மூலகம் உடலில் குறைவாக இருக்கும் போது இதய நோய், காது கோளாறுகள், எதிலும் ஈடுபாடின்மை போன்றவற்றை அனுபவிக்க நேரலாம். ஆகாய முத்திரையை பயில்வதன் மூலம் உடலில் ஆகாய மூலகத்தை சமநிலையில் வைத்து உடல், மன நலத்தை மேம்படுத்தலாம்.

ஆகாய முத்திரையைச் செய்வது எப்படி?

ஆகாய முத்திரையை ஒரு நாளில் 30 முதல் 45 நிமிடங்கள் வரை செய்யலாம். வேளைக்கு 15 நிமிடமாக செய்யலாம்.

1) பத்மாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.

2) நடு விரலின் நுனியையும் பெருவிரலின் நுனியையும் ஒன்றாக சேர்க்கவும். லேசாகத் தொட்டுக் கொண்டிருந்தால் போதுமானது.

3) மீதி விரல்களை நீட்டியவாறு வைக்கவும்.

4) கண்களை மூடிக் கொண்டு முத்திரையில் கவனம் செலுத்தவும்.

5) சீராக மூச்சு விடவும்.

ஆகாய முத்திரையின் பலன்கள்
  1. சளியைப் போக்குகிறது.
  2. இருதய நலனைப் பாதுகாக்கிறது.
  3. அதிக இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
  4. ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகளைப் போக்குகிறது .
  5. உடலில் உள்ள நச்சுக் கழிவுகளைப் போக்குகிறது.
  6. எலும்புகளைப் பலப்படுத்துகிறது.
  7. பற்களின் நலனைப் பாதுகாக்கிறது.
  8. காது கேட்கும் திறனை வளர்க்கிறது. காது வலி, காது இரைச்சல் போன்ற காது உபாதைகளை நீக்குகிறது.
  9. வெறுமையான மனதை சரி செய்து வாழ்வில் நாட்டத்தை ஏற்படுத்துகிறது.
  10. உள்ளுணரும் ஆற்றலை அதிகரிக்கிறது.
  11. மன அமைதியை வளர்க்கிறது.

 

3) லிங்க முத்திரை

 

நுரையீரலில் உள்ள அடைப்புகளை நீக்கவும், நுரையீரலைப் பலப்படுத்தவும் லிங்க முத்திரை உதவுகிறது. 

லிங்க முத்திரையைச் செய்வது எப்படி?

லிங்க முத்திரையை 30 நிமிடங்கள் செய்யவும். அல்லது வேளைக்கு 10 நிமிடங்களாக மூன்று வேளை செய்யலாம்.

1. பத்மாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.

2. இரண்டு உள்ளங்கைகளையும் மார்புக்கு நேராக வணக்கம் செய்வது போல் சேர்த்து வைக்கவும். இரண்டு கைவிரல்களையும் ஒன்றோடு ஒன்று பிணைக்கவும்.

3. இடது கை பெருவிரலை மட்டும் உயர்த்தி வலது கை பெருவிரல் மற்றும் சுட்டும் விரல் நுனிகள் தொடும்படி சுற்றிப் பிடிக்கவும்.

4.கண்களை மூடியவாறு முத்திரையில் கவனம் வைக்கவும்.

Tags: இருமல்சளிமுத்திரை
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

மரண அறிவித்தல் அமரர்.ஆனந்தகிருஷ்ணன் செல்வகிருஷ்ணன்

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயறு

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயறு
by Stills
04/12/2024
0

முளைப்பயிர்  உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதை தினமும் சாப்பிட்டால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது இந்த முளைப்பயறு கட்டாயம் கொடுப்பது அவசியம். இது...

மேலும்...

நெய் வெந்நீரில் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

நெய் வெந்நீரில் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
by Stills
04/12/2024
0

நெய் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய உணவாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.வயிற்றில் செரிமானத்தையும் ஆரோக்கியமாக...

மேலும்...

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க சாப்பிட வேண்டிய பூக்கள்.!

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க சாப்பிட வேண்டிய பூக்கள்.!
by Stills
24/05/2024
0

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க பெண்கள் ஐந்துவிதமான பூக்களை எடுக்க வேண்டும்.வாழைப்பூ,குங்குமப்பூ,ரோஜா பூ இதழ்கள் ,செம்பருத்தி பூஇதழ்கள்,செந்தாமரை பூஇதழ்கள். பெண்களின் கருப்பையை வலுவாக்கும் முதல்...

மேலும்...

நித்திய கல்யாணி மூலிகை, மருத்துவர் விளக்கம்!

நித்திய கல்யாணி மூலிகை, மருத்துவர் விளக்கம்!
by Stills
24/05/2024
0

மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்வதில் நித்திய கல்யாணி பூக்கள் முதலிடத்தில் உள்ளது. வெள்ளை நிற நித்ய கல்யாணி பூ, இலைகளின் சாறுகள் உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சையளிப்பதில் .. நவீன...

மேலும்...

ஞாபகமறதியை (அல்சைமர்) தடுப்பதற்கான வழி முறை.!

ஞாபகமறதியை (அல்சைமர்) தடுப்பதற்கான வழி முறை.!
by Stills
22/09/2023
0

2012 முதல் செப்டம்பர் மாதம் அல்சைமர் விழிப்புணர்வு மாதமாகவும் செப்டம்பர் 21 அல்சைமர் தினமாகவும் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அல்சைமர் நோய் பாதித்தவர்களால் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள...

மேலும்...

நவீன உபகரணங்களைக் கொண்டு கண் பார்வை திறனை சரிசெய்து கொள்ளலாம் விரிவான தகவல்.!

நவீன உபகரணங்களைக் கொண்டு கண் பார்வை திறனை சரிசெய்து கொள்ளலாம் விரிவான தகவல்.!
by Stills
22/09/2023
0

பார்வைத்திறன் சரியாகஇல்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகளும் அதிகம். உடல்ரீதியாக மட்டும் அல்ல மனரீதியாகவும் பாதிப்பினை அது ஏற்படுத்தும்.கண் பார்வைத்திறன் என்பது அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்று...

மேலும்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
இருமல் சளி போக்கும் மூன்று முத்திரைகள்.!

இருமல் சளி போக்கும் மூன்று முத்திரைகள்.!

17/10/2025

மரண அறிவித்தல் அமரர்.ஆனந்தகிருஷ்ணன் செல்வகிருஷ்ணன்

17/09/2025
நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

09/09/2025
தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

14/08/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.