உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த ரஜினிகாந்த் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தாலும், இது ஜெயிலர் படத்தின் வசூலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 169ஆவது படமாக உருவாகியுள்ளது ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், ஜாக்கி ஜெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறிப்பாக, ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணி முதல்முறையாக இணைந்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியது. இதைத் தொடர்ந்து இப்படம், உலகம் முழுவதும் கடந்த 10ஆம் தேதி வெளியானது. முதல் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் 10ஆம் நாள் தேசிய அளவில் ரூ.16.25 கோடி வசூலித்துள்ள ஜெயிலர், உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடியைத் தாண்டியுள்ளதாக திரைப்பட வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்., இப்படம் இருப்பினும், ஒரு சாக்னிக் (Sacnilk) அறிக்கையின்படி ஜெயிலர், படம் இதுவரை 477.6 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது என்று கூறுகிறது.
முன்னதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய திரைப்பட வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா ஜெயிலர் ரூ.700 கோடி (வாழ்நாள் வசூல்) வசூலிக்கும் என்று கணித்துள்ளார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தற்போதைய வேகத்தைத் தொடர்ந்தால், ரூ.800 கோடியைத் தொட்டு, அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாக மாற வாய்ப்புள்ளது.
இப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன ’ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில், இதர மொழி நடிகர் பட்டாளமும் நடித்திருப்பதால் கூடுதலாக வசூலையும் அள்ளி வருகிறது. மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் கர்நாடக நடிகர் ஷிவ் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருப்பதால், தமிழ்நாட்டைத் தாண்டியும் இப்படம், பிற மாநிலங்களிலும் வசூலைக் குவித்து வருகிறது.
குறிப்பாக, பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பி வருகிறது. முதல் நாளிலேயே உலக அளவில் ரூ.100 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்த ’ஜெயிலர்’, இரண்டாம் நாளில் ரூ.150 கோடி வசூலைக் கடந்தது. தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஜெயிலர் திரைப்படம் சக்கைப்போடு போட்டு வருகிறது.ஜெயிலர்’ படம் வெளியான மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ 200 கோடி கிளப்பில் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேநேரத்தில், இந்தியாவில், முதல் வார இறுதியில் ரூ.120 – ரூ.150 கோடியைத் தாண்டியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்திய அளவில் ’ஜெயிலர்’ வெளியான முதல் நாளில் (வியாழன்) ரூ.48.35 கோடியும், இரண்டாம் நாளில் (வெள்ளி) ரூ.25.75 கோடியும், 3வது நாளில் (சனி) ரூ.33.75 கோடியும் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று 4வது நாள் மற்றும் விடுமுறை நாளான ஞாயிறுக்கிழமையில் ’ஜெயிலர்’ பட வசூல் இன்னும் கூடுதலாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
அனைத்தையும் தாண்டி படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா வெளியான அனைத்து இடங்களிலும் நேர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளது. மக்கள் பாராட்டுகிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் ரஜினி சாருக்கு இந்த கதையின் மீதிருந்த நம்பிக்கை தான். படம் வெளியாவதற்கு மூன்று நாள் முன்பு அவருக்கு மட்டும் திரையிட்டுக் காட்டினோம். படம் பார்த்த அவரிடம் அது குறித்து கேட்டேன். படத்தின் கதையை கேட்ட போது உங்களது மனதில் காட்சிகள் வந்திருக்கும். அது போல் படம் வந்துள்ளதா என கேட்டேன். அதற்கு அவர், “நான் நினைத்ததை விட 10 மடங்கு அதிகமாக வந்துள்ளது. படம் நன்றாக வரும் என தெரியும். இந்த மாதிரி வரும் என நினைக்கவில்லை என்று கூறினார். எனக்கு இன்று இருக்கிற திருப்தி அன்றே வந்துவிட்டது.
நம்மை அதிகமானோர் சந்தேகத்துடன் பார்க்கும் போது படம் சரியாக நடக்குமா நடக்காதா என்ற யோசனை வரும். அனைத்திற்கும் முக்கிய புள்ளியாக இருக்கும் ஆள் நம்மை நம்பி, அவரது இமேஜ், நட்சத்திர அந்தஸ்து அனைத்தையும் வெளியில் வைத்து நாம் சொல்வதை மட்டும் கேட்டு இத்திரைப்படம் சரியாக வந்ததற்கு முக்கிய காரணம் அவர் தான்.நேரில் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி சொல்ல காத்திருக்கோம். விரைவில் வாருங்கள்” என்றார்.