Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இலங்கை

காணி ,வீட்டுத்திட்டம்,தருவதாக கூறிபணம் கேட்டால் முறைப்பாடு செய்யுங்கள்.அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்.

Stills by Stills
23/04/2024
in இலங்கை
0
காணி ,வீட்டுத்திட்டம்,தருவதாக கூறிபணம் கேட்டால் முறைப்பாடு செய்யுங்கள்.அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்.
0
SHARES
13
VIEWS
ShareTweetShareShareShareShare

செவ்வாய்க்கிழமை (23) வவுனியா, கண்டி வீதியில் உள்ள கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வழங்கப்படவுள்ளது.  பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்த பின்பும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இருந்தது. இது சம்மந்தமாக பல அமைச்சர்கள் செயற்பட்டிருந்தாலும் அது பூரணப்படுத்தப்படவில்லை.

எமது மாவட்டத்தின் வீட்டுத் திட்ட தேவை, உட்கட்டமைப்பு வசதிகளின் தேவை, வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கூறி வந்தோம். இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று தற்போது வடக்கிற்கு சோலர் பவர் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் இதன் மூலம் கிடைக்கவுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 50 ஆயிரம் வீட்டுத்திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட தகவல்கள் 25 ஆயிரத்தையும் கடந்து சென்றதால் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் வீடற்ற எவரும் இனி இருக்க முடியாது. உப குடும்பங்கள் அனைவருக்குமே இதன் மூலம் வீட்டுத்திட்டம் கிடைக்கும்.

வீட்டுத்திட்டம் மட்டுமன்றி எமது மாவட்ட மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் மக்களிடம் இருந்தும், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஊடாகவும் தகவல்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பொது இடங்கள் மற்றும் மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று, மக்களது குடிநீர் இணைப்புக்களை வழங்க முதல் கட்டமாக வவுனியா மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும், மன்னார் மாவட்டத்திற்கு 1,500 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின்சார இணைப்பு மன்னார் மாவட்டத்திற்கு 2,500 , வவுனியா மாவட்டத்திற்கு 1,500 உம், முலலைத்தீவு மாவட்டத்திற்கு 1,500  வழங்கப்பட்டு வருகின்றது. கிராம மட்ட தேவைகள் குறித்து நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்து விசேட நிதியைப் பெற்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சில கிராம மக்களுக்கு இத் தகவல்கள் கிடைக்கவில்லை. மின்சாரம், நீர் இணைப்பு இல்லாதவர்கள் உங்கள் பகுதி உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். அல்லது எமக்கு தெரியப்படுத்தவும். பொது வீதிகளுக்கான மின்சார இணைப்பும் வழங்கப்படுகிறது. எமது மக்களுக்கு எது தேவையோ அதனை செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் தயதராக இருக்கின்றார். கேட்டுப் பெற வேண்டியது எங்களது பொறுப்பு. மாவட்ட மட்டத்தில் 1,000 பேருக்கு பாரிய வாகனங்களை இயக்குவதற்கான பயற்சி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரம்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது அமைப்புக்களும் இளைஞர்களை வழிப்படுத்தி அவர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறப் கூடிய நிலையை உருக்வாக்க முன்வர வேண்டும்.

இதேபோன்று, பல கிராமங்களில் காணிகள் வன இலாகா சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. அதனை விடுவிக்க தொடர் நடைவடிக்கை இடம்பெறுகின்றது. நான் கடந்த காலங்களில் 3 ஜனாதிபதிகளுடன் பணியாற்றி இருக்கின்றேன். ஆனால் கடந்த காலத்தில் இருந்த இரு ஜனாதிபதிகள் வனஇலாகாவிடம் இருந்து காணிகளை விடுவிக்க பூரண கரிசணை காட்டவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதனை விடுவிக்க துரித நடவடிக்கை எடுத்துள்ளார்.

தேசிய ரீதியில் காணி விடுவிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரண்டு மாதங்களில் பல காணிகள் விடுவிக்கப்படும். விடுவிப்பதற்கான காணிகளின் விபரம் வந்துள்ளது. இதன் மூலம் காணி இல்லாத மக்களுக்கு அதே கிராம்களில் காணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்டபட்டுள்ளது. அவர்களது கிராமத்தில் காணி இல்லாதுவிடின் அயல் கிராமத்தில் காணியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பதற்கான நிலம் மற்றும் விவசாய நிலம் என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிலர் சில பகுதிகளில் ஏக்கர் கணக்கில் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்துள்ளார்கள். அதனை மீட்டு பொது மக்களக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் பொதுவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிலர் தற்போது அந்த அமைச்சர், அந்த எம்.பி என சொல்லி காணி எடுத்து தருவதாக கிராமங்களில் பணம் பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல முகவர்கள் நிதி பெறுவதாக கூறப்படுகிறது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது பெயரையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டால் முறைப்பாடு செய்யுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும. அரசசேவைகளை வழங்குவதற்கு எந்தப் பணமும் அறவிடப்பட முடியாது. நாங்கள் மக்களது சேவையாளர்கள். மக்களிடம் பணம் பெற்று தான் அவர்களுக்கு சேவை வழங்கும் கலாசாரம் இல்லை. வன்னியில் அவ்வாறு நடைபெறக் கூடாது.

ஒரு காணிக்கு 15 நாளில் ஆவணம் தருவதாகவும் பணம் பெறப்படுகிறது. வவுனியா ஊடகவியலாளர்கள் தமது குடியிருப்பு காணி பெற எத்தனை வருடமாக போராடுகிறார்கள். ஆனால் 15 நாளில் ஆவணத்துடன் காணி எவ்வாறு சாத்தியம். இவ்வாறு பொய்யான கதைக்களைக் கூறி பாமர மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றுகிறார்கள்.

நாமும் காணிப் பிரச்சனை, குளம் பிரச்சனை என அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு வருகின்றோம். போய் பார்வையிடுவதும் கதைப்பதும் தான் முகப் புத்தகங்களில் வருகிறது. அதற்கு என்ன நடந்தது என்பது பிறகு வருவதில்லை. அதற்கு என்ன நடந்தது என்ற தகவலைக் கேளுங்கள். மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு நபர் 70 ஏக்கர் காணிகளை பிடித்து வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுத்துள்ளதாக அமைப்பு ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல், எம்மை சந்திக்கும் பலர் எம்முடன் நின்று புகைப்படம் எடுப்பார்கள். அப்படி எடுத்த ஒருவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நானும் துணை என கூறாது முறைப்பாடு தாருங்கள் நடவடிக்கை எடுக்கப்படும்.

எம்.பி ஒருவரின் அரசியல் கட்சி பிரதி நிதி பிறிதொரு நபருக்கு காணி கொடுக்க மக்கள் தயார் என பிரதேச செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த மக்களுக்கு அந்த விடயம் தெரியாது. அந்த எம்.பிக்கும் தெரியுமோ தெரியாது. சுடலைக் காணியை கூட பிடித்து கொடுக்கிறார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

காணி மற்றும் வீட்டுத்திட்டம் தொடர்பான விடயங்கள் பிரதேச செயலகத்தில் உள்ளன. அங்கு சென்று பார்வையிட்டு தங்களது விபரங்கள் இல்லையெனில் பதிவு செய்யுங்கள். முகவர்களிடம் பணம் செலுத்தி ஏமாறாது அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருங்கள். காணி ஆவணங்கள் கிடைப்பின் அது நீண்ட ஒரு நடவடிக்கை ஊடாகவே நடைபெறுகிறது. அது ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் பிரதேச செயலகம் முன்னெடுக்கும் நடவடிக்கை. எம்.பி மார் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெயர் பெறுவதற்காக முகவர்கள் கூறுவது பொய் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: வீட்டுத்திட்டம்காணிபணம்கேட்டால்முறைப்பாடு செய்யுங்கள்.
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

“முல்லை சசி”யின் ‘முட்டக்கண்ணி’ பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.

அடுத்த செய்தி

நிதி மோசடி எழுத்தாளர் உபுல் சாந்த சன்னஸ்கல கைது.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!
by அரவிந்த்
09/09/2025
0

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்றஇந்திய மத்திய அரசின் அறிவிப்புமகிழ்சிக்குரியது! தமிழ்நாட்டிலிருந்து சிரஞ்சீவி மாஸ்டர் சிறப்புப் பேட்டி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் சட்டரீதியாக வாழ்வதற்கான அனுமதியை இந்திய...

மேலும்...

பாராளுமன்றக் கற்கை ஆய்வு மையமாக சபாநாயகரின் இல்லம்!

பாராளுமன்றக் கற்கை ஆய்வு மையமாக சபாநாயகரின் இல்லம்!
by Stills
01/08/2025
0

24.07.2025ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை "பாராளுமன்றக் கற்கைகள் மற்றும் ஆய்வு மையமாக” மாற்றுவது தொடர்பான முன்மொழிவுக்கு சபாநாயகர்...

மேலும்...

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட தீர்மானம்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட தீர்மானம்.
by Stills
01/08/2025
0

எதிர்வரும் திங்கட்கிழமை (04) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு  தீர்மானித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய...

மேலும்...

மன்னாரில் கத்தி முனையில் போதைப்பொருள் மாபியாக்கள் அட்டகாசம்!

மன்னாரில் கத்தி முனையில்  போதைப்பொருள் மாபியாக்கள் அட்டகாசம்!
by Stills
01/08/2025
0

நேற்று வியாழக்கிழமை (31)  தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த ஒருவர்   மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றிற்காக முன்னிலையாகியதோடு, வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில்  மாலை மன்னாரில்...

மேலும்...

குற்றவாளிகளை பாதுகாக்கவே திறமையான அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கியது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

குற்றவாளிகளை பாதுகாக்கவே திறமையான அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கியது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
by Stills
18/07/2025
0

நேற்று வியாழக்கிழமை (17) கொழும்பு தெஹிவளை ரயில் நிலையத்துக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில்...

மேலும்...

நீர்கொழும்பு கட்டான பகுதியில்இருவர் துப்பாக்கிகளுடன் கைது!

நீர்கொழும்பு கட்டான பகுதியில்இருவர் துப்பாக்கிகளுடன் கைது!
by Stills
18/07/2025
0

நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது கட்டான - தெமன்ஹந்திய பகுதியில்   இரண்டு சந்தேக நபர்கள் நான்கு...

மேலும்...
அடுத்த செய்தி
நிதி மோசடி எழுத்தாளர் உபுல் சாந்த சன்னஸ்கல கைது.!

நிதி மோசடி எழுத்தாளர் உபுல் சாந்த சன்னஸ்கல கைது.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1

மரண அறிவித்தல் அமரர்.ஆனந்தகிருஷ்ணன் செல்வகிருஷ்ணன்

17/09/2025
நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

09/09/2025
தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

14/08/2025
இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு- பிரியங்கா காந்தி

இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு- பிரியங்கா காந்தி

14/08/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.