இன்று செவ்வாய்க்கிழமை (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கல்வி அமைச்சின் செலவுத் தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
கல்வி, உயர்கல்வி, தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய,கல்வி, உயர்கல்வி, தொழில் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ உட்பட அமைச்சுக்களின் அதிகாரிகள் பலர் இதன்போது கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் ஒரு அங்கமாக கல்வி அமைச்சின் செலவுத்தலைப்பு தொடர்பிலான வரவு செலவு திட்ட யோசனைகள் குறித்த கலந்துரையாடல்நடைபெற்றது.




















