திரு. கரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாழ்த்துகள்!!!
கனடாவின் அமைச்சரவைக்கு திரு. கரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டமை தொடர்பாக திரு. கரி ஆனந்தசங்கரிக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது பாரட்டுக்களைத் தெரிவிக்கின்றது.
அந் நியமனம் அவரது பொதுச் சேவைக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரம் ஆகும். உலகில் பலம் வாய்ந்த நாடு ஒன்றில் முக்கிய முடிவுகள் எடுக்கும் அவையில் முதன் முறையாக ஒரு ஈழத்தமிழருக்கு இடம் கிடைத்துள்ளது. ஈழத் தமிழ் தேசம் கரிக்கு கிடைத்த அங்கிகாரம் குறித்து பெருமிதம் கொள்கிறது .
அவரது அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற நாடுகடந்த தமிழீழ அவரை வாழ்த்துகிறது.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பாரட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.