பிரியமானவர்களே…
கசந்தாலும்
உண்மை பேசுவோம்.
இடி இடி என
கொத்துக் குண்டுகள்
விழுந்து வெடித்து
அன்று ஈழத்தில்
நம் பிள்ளைகள்
செத்தன.
இஸ்ரேல்
குண்டுமழை பொழிந்து
இன்று
இஸ்லாமியப் பிள்ளைகள்
செத்துக் கொண்டிருக்கின்றன.
வெடிப்பதை நிறுத்தினால்
லாபம் இரண்டு
ஒன்று
உயிர்கள் மரிக்காது
இரண்டு
இயற்கை சாகாது.
எல்லாவற்றுக்கும் மேலாக
சுற்றுச்சூழல்
நிலைக்கும் தழைக்கும்.
இனி எது வேண்டுமென
ஈரமுள்ள இதயங்களும்
இயற்கையை நேசிக்கும்
உயிரினங்களும்
முடிவு செய்வோம்.
காற்றும் மண்ணும்
மலையும் மரங்களும்
நமக்கானதல்ல
நமக்கு பிறகான
தலைமுறைக்கானது.
விழா வேண்டாமென்று
சொல்லவில்லை
வெடி இல்லா தீபாவளி
கொண்டாடுவோம்.
இனியாவது
பகையும் புகையுமில்லா
உலகை உருவாக்குவோம்.
பிரியமானவர்களே…
கசந்தாலும்
உண்மை பேசுவோம்.
பேரன்போடு,
வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
12.11.2023