கிளிநொச்சியில் வீடு புகுந்து பணம் நகைகள் கொள்ளை கால்நடைகள் திருட்டு பொலிஸில் முறைப்பாடளித்தும் பயனில்லை என மக்கள் கவலை .
கிளிநொச்சி, கனகபுரம் 10ஆம் பண்ணைபகுதிகளில் தாங்கள் வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்படுகிற கால்நடைகள் திருடப்படுவதாகவும், பராமரிப்பின்றி காணப்படுகின்ற காணிகளுக்குள் வைத்து கால்நடைகள் வெட்டப்படுவதாகவும், இதனால் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தபகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, பகல் வேளைகளில் வீடு புகுந்து கத்திமுனையில் பணம், நகைகள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவங்களும் இடம்பெற்று வருவதால் இரவு வேளைகளில் மட்டுமன்றி, பகலிலும் வீடுகளில் தனியாக இருப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த பிரச்சினைகள் தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் பல முறை முறைப்பாடுகள் அளித்தபோதும், எந்த பயனும் இல்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலையோடு குறிப்பிடுகின்றனர்.