இன்று வியாழக்கிழமை (17) செம்மணி மனிதப்புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் 24 நாட்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் போது சுமார் 65 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.