பெயர்: செல்லத்துரை குமாரசாமி (வரதன்) ஆசிரியர்,
சொந்த இடம்: கரவெட்டி கிழக்கு
கரவெட்டி கிழக்கு (தெடுத்தனை) பிறப்பிடமாகவும் உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராக கடமையாற்றிய செல்லத்துரை குமாரசாமி (வரதன்) ஆசிரியர் இயற்கை எய்தினார்.
இவர் , இந்தியாவின் புகழ்பெற்ற பாடகர் சீர்காழி கோவிந்தராஜனின் மாணவனாக இருந்து இசை ஞானம் பெற்றவர். கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் முன்னர் ஆசியராக பணியாற்றிய இவர் பின்னாளில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். பல பக்தி பாடல்கள் பாடியுள்ள இவர் தமிழீழத்தின் மதிப்புமிக்க மனிதராக புலிகள் அமைப்பினரால் கெளரவிக்கப்பட்டவர். தமிழ் மக்களின் உணர்வுகளை துல்லியமாக வெளிக்கொண்டு வந்திருந்த ‘பூத்தகொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது’ என்ற பாடலினை பாடி மக்களின் மனங்களை வென்றிருந்தார். அத்துடன், ஈழத்தின் பல புரட்சிப் பாடல்களை பாடி தமிழ் மக்களின் மனங்களின் வாழ்கின்றார். இவரது திறைமைக்காக எம் தேசியத் தலைவரால் கெளரவிக்கப்பட்டவர் என்பது கூடுதல் சிறப்பு.
ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினரின் துயரில் தமிழ்மக்கள் அனைவரும் பங்கெடுத்துள்ளனர். இவரின் ஆத்மா சாந்தியடைய தமிழர்கள் பிரார்த்திக்கின்றனர்.