ஞானதீபம் கலைவிழா: ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும் நிகழ்வு
லண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா
ஈழத்தமிழர்கள் தமது கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாத்து, தலைமுறை தலைமுறையாக உலகெங்கும் பரப்பி வருகிறார்கள்.
இந்த பண்பாட்டுச் சாதனையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளும், அவற்றின் பழைய மாணவர் சங்கங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஞானசாரியர் பழைய மாணவர் சங்கத்தின் வரலாறு
வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் அமைந்த ஞானசாரியர் பாடசாலையின் பழைய மாணவர் சங்கமானது சங்கமாக அன்றி ஓர் குழுவாக,1993ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பழைய மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்களின் ஒற்றுமையால் உருவாகியது.
அன்றைய காலத்தில், திருமதி செல்வராஜா, திரு கணநாதன், திரு பாலசிங்கம் மற்றும் திரு திருமதி நடராஜா ஆகியோர் வழிகாட்டலாக இருந்தனர்.
இவர்களுடன், சிவானந்தராஜா, ஜெயானந்தம், சிவரூபன், வாசுகி, திருமதி சுவாமிப்பிள்ளை ஆசிரியை வழிவந்தவர்கள் என கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்த நாடுகளில் வந்து, பலரின் ஆக்கமும் இணைந்து ஓர் குழுமத்தை உருவாக்கியது.இதனை அன்றைய காலத்தில் ஞானசாரியர் அதிபராக இருந்த அருளானந்தம் அதிபர் அவர்களும் பொதுநலனைக் கருத்தில் கொண்டு ஆக்கமாக உதவினார்.
“ஞானதீபம்” கலைவிழா
1999ஆம் ஆண்டு மாணவர் சங்க அமைப்பாக தொடங்கிட அன்றைய காலத்தில் ஞானசாரியர் பாடசாலையில் இருந்து அப்போது புலம்பெயர்ந்து வந்த இளையோர்களாக இருந்த வசந்தகுமார் சங்கரப்பிள்ளை, ஞானகுமார் சங்கரப்பிள்ளை அன்றைய காலத்தில் இவர்களும் தமது அர்ப்பணித்த பணிகளை ஆற்றி ஞானதீபமாக ஒளிர காரணமாகினர். இதனை அன்றைய காலத்தில் அதிபராக இருந்த சிவசிதம்பரம் அவர்களும் பொதுநலனைக் கருத்தில் கொண்டு ஊக்குவித்தார். “ஞானதீபம்” கலைவிழா, தற்போது இலண்டன், கனடா போன்ற புலம்பெயர் நாடுகளில் சிறப்புடன் நடக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும், பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினதும், பழைய மாணவர்களது ஒருங்கிணைப்பிலும், அந்தந்த நாடுகளில் நடைபெறும் இவ்விழா கிராமிய மக்களை ஒன்றிணைத்து, அவர்களின் பல்வேறு சமூக–பண்பாட்டு அடையாளங்களையும் பிரதிபலிக்கிறது.
வரும் ஆண்டு, இவ்விழா லண்டன் மாநகரில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி விவரங்கள்
தேதி: 10.01.2026
இடம்: Redbridge Town Hall, 128‑142 High Road, Ilford, London IG1 1DD, United Kingdom
நேரம்: பிற்பகல் 3.00 மணி – இரவு 10.00 மணி
பங்கேற்பாளர்கள்:
பழைய மாணவர்கள், அவர்களது பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பாடசாலை உருவான 1935ஆம் ஆண்டில் இருந்து பாடுபட்டவர்களின் வாரிசுகளும் கலந்து கொண்டே விழாவை சிறப்பிக்கும்.
கார் பார்க்கிங் வசதிகள்
Clements Road Multi-Storey Car Park, Ilford, IG1 1BH – சுமார் 640 கார்கள் நிறுத்தக்கூடிய இடம்
Ilford Town Centre (Exchange Ilford) Car Park, 70 Ilford Lane / IG1 1RS – சுமார் 1,200 கார்கள் நிறுத்தக்கூடிய இடம்
குறிப்பு: Town Hall அருகே நேரடியாக பெரும்பான்மையான தனிப்பட்ட பார்கிங் இல்லை; மேலே உள்ள பொதுக் கார்பார்களை பயன்படுத்துவது சிறந்தது.
பண்பாட்டு முக்கியத்துவம்
ஞானதீபம் கலைவிழா, பாடசாலையின் ஒரு நிகழ்ச்சியாக மட்டுமல்ல;
அது ஈழத்தமிழர் நினைவுகள், அடையாளங்கள் மற்றும் பண்பாட்டுத் தொடர்ச்சியை புலம்பெயர் சமூகங்களிலும் உயிர்ப்புடன் நிலைநிறுத்தும் பெரும் மேடையாக விளங்குகிறது.



















