திருகோணமலை மாவட்டத்தில் தி/இ.கி.ச.ஶ்ரீ. கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் ஹரிஹரன் தன்வந்த் என்ற மாணவனே இவ்வாறு பாக்கு நீரினையை நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.
இன்றைய தினம் 01.03.2024 (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் தனுஸ்கோடியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த தன்வந்த் நண்பகல் 2.00 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.
தனுஸ்கோடி முதல் தலை மன்னார் வரையான சுமார் 32 கிலோ மீட்டர் தூரத்தை 9 மணித்தியாலம் 37 நிமிடம் 54 விநாடிகளில் நீந்திக் கடந்து இலங்கையில் புதிய சாதனையை நிலை நாட்டியுள்ளார்,
தன்வந்தை பாராட்டி குளோபல் வேல்ட் ரெக்கோர்ட் (Global world Record) ஊடாக சான்றிதழ் மற்றும் பதக்கம் இலங்கைக்கான இந்திய துணைத் தூதூவரால் வழங்கப்பட்டது.
மேலும், சிறுவன் தன்வந்த்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
குறித்த சாதனையைப் படைத்து கிழக்கு மாகாணத்திற்கு இச்சிறுவன் பெருமை சேர்த்துள்ளார். இச்சிறுவன் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துக்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறுவன் தன்வந்த், போதைப்பொருள் பாவனையைத் தவிர்த்தல் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்கக் கோரியே பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்துள்ளார் என்பது குறி்ப்பிடத்தக்கது.