“மேப் மை இந்தியா நிறுவனம்” தனது சுதேசி வரைபடங்கள் மற்றும் நேவிகேஷன் செயலி, மேப்பல்ஸ் மேம் மை இந்தியா செயலி , இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோரில் அனைத்து பிரிவுகளிலும் முதல் நிலை செயலியாக முன்னேறி உள்ளது.
மேப் மை இந்தியா (C.E. Info Systems Ltd ) நிறுவனம் தனது சுதேசி வரைபடங்கள் மற்றும் நேவிகேஷன் செயலி, Mappls MapmyIndia ஆப், இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோரில் அனைத்து பிரிவுகளிலும் முதல் நிலை செயலியாக முன்னிலை பெற்றிருகின்றது.
நேவிகேஷன் பிரிவிலும் முதலிடம் இது பிடித்துள்ளது. ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கூகுள் மேப்ஸ் 7வது இடம் பிடித்துள்ளது. மேலும், Mappls செயலி, ஆண்ட்ராட்டு பிளே ஸ்டோரிலும் வரைப்படங்கள் மற்றும் நேவிகேஷன் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.
அனைத்து பிரிவுகளிலும் இந்த செயலி 15வது இடம் பிடித்துள்ளது. கூகுள் மேப்ஸ் முதல் நூறு செயலிகள் பட்டியலில் இடம்பெறவில்லை.”நாடு முழுவதும் உள்ள பயனாளிகளின் ஆதரவு காரணமாகவே, இந்த செயலி பட்டியலில் முன்னிலை பெறக் காரணம் என்றும், பயனாளிகளே சமூக ஊடகங்களில் இந்த செயலிக்கு ஆதரவு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக,” மேப் மை இந்தியா இது தொடர்பான செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. முப்பரிமாண சந்திப்பு தோற்றம், சாலை வேகத்தடை விவரங்கள், பயணக் கட்டணம், எரிபொருள் செலவு மதிப்பீடு, வளைவுகள், பள்ளங்கள், வேகத்தடைக்கான முன் எச்சரிக்கைகள், ஆகியவற்றை இந்த செயலி வழங்குகிறது. இந்த அம்சங்கள் வெளிநாட்டு செயலிகளில் இல்லாததோடு, இந்தியா முழுவதும் உள்ள பயனாளிகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது.
இந்த செயலி மிகவும் மேம்பட்ட, அதி நவீன வரைபட தொழில்நுட்பம், தரவுகள் மூலம், மிகவும் பாதுகாப்பான, துல்லியமான வழிகாட்டுதலை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி முழுமையான இந்திய செயலியாக விளங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mappls செயலி, ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ். இணையம் ஆகியவற்றில் செயல்படுவதோடு, ஆண்ட்ராய்டு கார் மற்றும் கார்பிளேவிலும் செயல்படுகிறது.