கடந்த வாரம் லாஸ்வெகாசில் டொனால்ட் டிரம்பின் ஹோட்டலிற்கு வெளியே வெடித்துசிதறிய டிரக் வண்டியின் வாகனத்தை செலுத்தியவர் மத்தியுஅலன் லிவல்ஸ்பேர்கெர் இவர் அமெரிக்க இராணுவத்தின் விசேட படைப்பிரிவான கிறீன் பெரெட்டில் பணியாற்றியவர் விசேட படைப்பிரிவின் சிரேஸ்ட தரத்தில் உள்ள ஒருவர் ஜேர்மனியில் பணியில் உள்ள இவர் சம்பவம் இடம்பெற்றவேளை விடுமுறையில் இருந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரணித்த வேளை அவர் விடுப்பிலிருந்தார் என தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவம் எனினும் அவர் தன்னைதானே சுட்டுதற்கொலை செய்து கொள்ள முயன்றவேளை உயிரிழந்தார் என்பதை தெரிவிக்கவில்லை
டிரம்ப் சர்வதேசஹோட்டலிற்கு வெளியே இடம்பெற்ற வெடிப்புசம்பவத்தின் நோக்கம் குறித்து கண்டறிவதற்காக அதிகாரிகள் மத்தியு லிவெல்ஸ்பேர்கெரின் இலத்திரனியல் சாதனங்களை தொடர்ந்தும் ஆராய்ந்துவருகின்றனர்அமெரிக்கா வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது அமெரிக்கா விழித்துக்கொள்வதற்காக தான் இந்த வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக குறிப்பொன்றை கைத்தொலைபேசி எழுதிவைத்துள்ளளார் என விசாரணையாளர்கள்தெரிவித்துள்ளார்