
சரவணை கிழக்கு, வேலணையை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவகுருநாதன் (சிவம்) அவர்கள் நேற்றுமுன்தினம் (04.03.2025) செவ்வாய்க்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற இந்திராணியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற திரு. நாகமுத்து நடராசா மற்றும் திருமதி பாக்கியலட்சுமி தம்பதியின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. முத்துக்குமார் திருநாவுக்கரசு மற்றும் திருமதி பூமணி தம்பதியின் அன்பு மருமகனும் திருமதி சிவநிதி, திரு.சிவகரன், திரு.கவிந்தன் மற்றும் காலஞ்சென்ற செல்வி சிவாஜினி (நிலமங்கை)ஆகியோரின் பாசமிகு தந்தையும், கிஷாந், குருஷாந், சகிஸ்னா, சஷ்மியா, கிஷானிகா, பிரித்திக், கனிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் காலஞ்சென்ற திரு. கந்தசாமி மற்றும் திருமதி தவமலர் (தவம்) திருமதி சொர்ணகாந்தி (தேவி), திரு.கேதாரநாதன் (சோதி) ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற திரு.அருமைநாயகம் மற்றும் திரு. தங்கவேல், திருமதி சறோயினி தேவி, திருமதி இந்திராணி, திருமதி ஏகநாயகி, திருமதி பாக்கியலட்சுமி, திருமதி ரதிதேவி, திருமதி திருவருட்செல்வி, காலஞ்சென்ற திரு.கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் திரு.கிருபராசா, திருமதி தயாபரி, திருமதி அமிர்தவேணி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (07.03.2025) வெள்ளிக்கிழமை காலை 08.00 மணியளவில் யாழ்ப்பாணம் 81/2 பிறவுண் வீதி, கொக்குவில் கிழக்கு கொக்குவில் (கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில்) அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சரவணை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதிக்கிரியைகள் 07-03-2025 அன்று சரவணை இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல் குடும்பத்தினர்
மகள் -00447546 821627 -சிவநிதி (லீலா)
மகன் – +94 76 709 7405 -சிவகரன் {கபிலன்)
மகன் -00447702240557 கவிந்தன் (ஐங்கரன்)
மருமகன் -+44 7711 275184 கிருபா