யாழ்ப்பாணம் நெடுந்தீவு கிழக்கு 15ம் வட்டாரப் பகுதியில் மக்கள் நடமாற்றம் இல்லாத தனியார் காணியில் துப்பாக்கி ரவைகள் 750 இற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நெடுந்தீவு பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் அனுமதியை பெற்ற பின்னர் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .அனுமதி கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் இணைந்து நடாத்திய தேடுதலில் ரி 56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 750 இற்கும் மேற்பட்ட ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. நெடுந்தீவில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலையில் நிறுத்தப்பட்டதாக தெரியவருகிறது.
குற்றவாளிகளை பாதுகாக்கவே திறமையான அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கியது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
நேற்று வியாழக்கிழமை (17) கொழும்பு தெஹிவளை ரயில் நிலையத்துக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில்...
மேலும்...