நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது கட்டான – தெமன்ஹந்திய பகுதியில் இரண்டு சந்தேக நபர்கள் நான்கு துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டான பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கட்டியால பகுதியைச் சேர்ந்தவர்கள்.51 மற்றும் 58 வயதுடையவர்களாகும் ,.
சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர், T-56 ரக துப்பாக்கியும் மற்றையவரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ஒரு ரிவால்வர் அச்சு மற்றும் துப்பாக்கிகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பல கருவிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.