வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான சிறந்த தீர்வுத்திட்டத்தை தாம் முன்வைத்துள்ளதாகவும், இந்த தீர்வு திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதா இல்லையா என்பது தமிழ் அரசியல்வாதிகளின் கைகளில் உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல்வாதிகளுடனான சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
13 ஆம் திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் உறுதிமொழி வழங்கிய போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தாம் ரணில் ராஜபக்ச அல்ல எனவும் பதிலளித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினை
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான சிறந்த தீர்வுத்திட்டத்தை தாம் முன்வைத்துள்ளதாகவும், இந்த தீர்வு திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதா இல்லையா என்பது தமிழ் அரசியல்வாதிகளின் கைகளில் உள்ளதாகவும், வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே தமது இலக்கு எனவும், அதில் அரசியல் இலாபமீட்ட விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் 13 ஆம் திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இணங்கினால் மட்டுமே, 13 ஆம் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஒருபோதும் அநீதி இழைக்கப்போவதில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.