இன்று சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நாட்டின் 49வது சட்டமா அதிபராக கே. ஏ. பாரிந்த ரணசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்ட்டுள்ளார்.
சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரட்ணத்தின் பதவிக்காலம் கடந்த 26 ஆம் திகதியுடன் முடிவடைந்ததையடுத்து சட்டமா அதிபரின் பதவி வெற்றிடமாக இருந்தது.
இந்நிலையில், அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுக்குப் பின்னர் புதிய சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி சட்டத்தரணி பரீந்த ரணசிங்க இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் சட்டமா அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.