நேற்று செவ்வாய்க்கிழமை (14) மொரட்டுவை பகுதியில் மேற்கொள்ளப்பட்டசோதனையின் போது போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் ஒருவர் மொரட்டுவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவை, ராவதாவத்தை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை விசாரித்தபோது போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட ஒரு அச்சு இயந்திரம், 5,000 ரூபா நாணயத்தாள்கள் 25 , 1,000 ரூபா நாணயத்தாள்கள் 08, 100 ரூபா நாணயத்தாள் ஒன்று மற்றும் 20 ரூபா நாணயத்தாள்கள் இரண்டு என்பன சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.