இத்தாலிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட போலிவீசா ஆவணங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றின் தலைவர் போன்று நடித்து பல மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த நடிகர் உட்பட மூவரை பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் கொழும்பு புறக்கோட்டையில் வைத்து கைது செய்துள்ளனர். சந்தேக நபரான நடிகர் சூதாட்டத்துக்கு அடிமையானவர் என்றும் கசினோ விளையாடி அவர் ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாவுக்கு மேல் நஷ்டம் அடைவதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
பொலிஸாரைத் தவிர்த்து வெவ்வேறு பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் பதுங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர் பல இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள், வானொலி நிறுவனங்களின் ஊடகவியலாளர் மற்றும் ஊடகப் பணிப்பாளராக பல பதவிகளை வகித்தவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.