முன்னாள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, அண்மையில் விடுதலையான சாந்தன் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது உடல் இலங்கைக் கொண்டு அனுப்பப்பட்டுள்ளது.
விமானம் மூலம், இன்று அதிகாலை 2.30 மணிக்கு சாந்தன் உடல் இலங்கைக்குக் கொண்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 32 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் சாந்தன். சிறையிலிருந்து விடுதலையான நிலையில், உடல்நிலை பாதிப்புக்கு ராஜீவ் காந்தி அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன், நேற்று முன்தினம் (28) காலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். சாந்தனுடைய கடைசி விருப்பம் அவரது தாயைப் பார்க்க வேண்டும் என்பதுதான். ஆனால், இலங்கை திரும்ப முடியாததால், அது நிறைவேறாமலேயே அவர் மரணமடைந்தார்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று (29) இரவு 11.00 மணியளவில் அவரது உடல் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. இந்திய தூதரகத்தின் மூலம், இலங்கை கொண்டு செல்ல அனுமதி கொடுத்தது. இதனை அடுத்து இலங்கை தூதரகம் அனுமதியை தராததால் சுமார் ஒன்றரை மணி நேரம் சரக்குகள் கையாளும் வெளிப்பகுதியில் சாந்தனின் உடல் வைக்கப்பட்டிருந்தது.
இலங்கை தூதரகம் அனுமதி அளித்த பிறகு சாந்தனின் உடல் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் மூலம் இன்று அதிகாலை 2.30 மணிக்கு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுடன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பா.புகழேந்தி இலங்கை சென்றுள்ளார்
முன்னதாக, சாந்தனின் உடலுக்கு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். சாந்தனின் சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள் செய்யப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.