சீனாவால் இலங்கையில்உருவாக்கப்பட்ட முதல் செயற்கை கடற்கரை.
இலங்கையில்முதல் செயற்கை கடலை 15 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் சீனா இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை அண்மித்திருக்கும் கடல் பகுதியை மணல் போட்டு நிரப்பி நிலப்பரப்பாக மாற்றி இந்தக் கடற்கரையை உருவாக்கி அதைத் தற்போது மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்துவிட்டுள்ளது .கொழும்புத்துறைமுக நுழைவாயிலில் இருந்து சுமார் 3 கி.மீ பயணித்தால் செயற்கை கடற்கரையை அடைய முடியும்.
நுழைவுக் கட்டணம் எதுவுமில்லை கொழும்பு துறைமுக நகரத்திற்குச் சொந்தமான மொபைல் செயலியின் ஊடாகப் பதிவு செய்து, அதில் கிடைக்கப் பெறும் கியூ.ஆர் ரகசிய இலக்கத்தைப் பயன்படுத்தி உள்ளே செல்ல முடியும். பிரதான வீதியின் இரு புறங்களிலும் கட்டுமானப் பணிகளை அவதானிக்க முடிந்தது.
செயற்கை கடற்கரைக்குள் செல்லும் நுழைவாயில் வாகன தரிப்பிடத்தை அண்மித்தே அமைந்துள்ளது.கடற்கரைக்குள் செல்லும் வழியில் உணவு கடைத் தொகுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கடலுக்கு நடுவில்பாரிய கற்களைக் கொண்டு மதில் அமைக்கப்பட்டுள்ள காரணத்தால் செயற்கை குறிப்பிட்ட தூரத்திற்கு கடலில் பாரிய அலைகள் காணப்படவில்லை.
இந்த கடலில் விநோத படகு சேவைகளும் காணப்படுகின்றன. காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த செயற்கை கடற்கரையைப் பார்வையிடும் சந்தர்ப்பத்தை நிர்வாகத்தினர் வழங்கியுள்ளனர்.
கடற்கரையைப் பார்வையிடுவதற்காகப் பெருந்திரளான மக்கள் தொடர்ச்சியாக வருகை தந்த வண்ணம் உள்ளனர். நிகழ்வுகளை செய்யும் வகையிலான படகு சேவைகளும் இந்த இடத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளன.
பிரசித்தி பெற்ற உணவகங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளதுடன், விருந்து உபசாரங்களையும் நடத்துவதற்கான வாய்ப்பு இங்கு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு காலி முகத்திடலில் ஆழ்கடல் பகுதியில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கற்கள் நிரப்பப்பட்டு அலையின் சீற்றம் குறைக்கப்பட்டுள்ள காரணத்தால், செயற்கை கடற்கரையில் அலையின் சீற்றம் குறைவாகவே காணப்படுகிறது.
செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்தப் பகுதியில் ஆழம் குறைவாகவும் அலையின் சீற்றம் குறைவாகவும் இருக்கும் என்பதால் மக்கள் அச்சமின்றி நீராட முடியும்.