தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பரிந்துரைகளுக்கு அமைய, அரசாங்க வைத்தியசாலைகளிலிருந்து இரு வகையான அஸ்பிரின் மருந்துகளை விலக்கிக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக மருத்துவ வழங்கல் பிரிவு அறிவித்துள்ளது .இது தொடர்பான சுற்றறிக்கையை ஒன்றினையும் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் அஸ்பிரின்களின் பல மாதிரிகள் சமீபத்தில் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையினால் பரிசோதிக்கப்பட்டது. இதன்போது, இரண்டு வகை மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது
இதன்படி, குறித்த இரு வகைகளையும் சேர்ந்த அனைத்து அஸ்பிரின் மருந்துகளையும் அகற்றுமாறு மருத்துவ வழங்கல் பிரிவு அனைத்து வைத்தியசாலைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதேவேளை, இரு வகை அஸ்பிரின்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ள போதிலும் வைத்தியசாலைகளில் அஸ்பிரின் தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் கபில விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.