Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இலங்கை

தமிழர்களை “வெட்டித் துண்டு துண்டாக வீசுவேன்” – தேரரின் புதிய அவதாரம்

கண்ணன் by கண்ணன்
16/12/2025
in இலங்கை
0
தமிழர்களை “வெட்டித் துண்டு துண்டாக வீசுவேன்” – தேரரின் புதிய அவதாரம்
0
SHARES
29
VIEWS
ShareTweetShareShareShareShare

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் (Ampitiya Sumanarathana Thero) என்பவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு, மங்களாராம விகாரையின் தலைமை பௌத்த பிக்கு ஆவார். இவர் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்காக செய்திகளில் அடிபடுபவர். தெற்கில் வாழும் தமிழர்களை “வெட்டித் துண்டு துண்டாக வீசுவேன்” என்று இவர் பேசியது கடந்த காலங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (15) நீதிமன்ற பிடியாணை பிறப்பித்து வெளிநாட்டு பயணத்தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் ஜனவரி 26 திகதி, குறித்த வழக்கை ஒத்திவைத்துள்ளது.

கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் கருத்து வெளியிட்டபோது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்’ என தெரிவித்தார்.

இதையடுத்து குறித்த வன்முறையான கருத்துக்கு எதிராக 2023-10-27ம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக  முறைப்பாடு செய்ததுடன்  சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழுள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில், கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் தேரரை கைது செய்யுமாறு உத்தரவிட்டது.

இந்தநிலையில் குறித்த வழக்கு கடந்த 8ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது குறித்த தேரர் நீதிமன்றில் சமூகமளிக்காத நிலையில் வழக்கு தொடுநர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுரையின் படி தேரரை இதுவரை கைது செய்யப்படவில்லை என நீதவான் கவனத்துக்கு கொண்டு வந்தார்

இதையடுத்து நீதவான் அடுத்த வழக்கு தவணை எதிர்வரும் 15ம் திகதி  முன்னர் குறித்த தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் குறித்த தேரரை இதுவரை நீதிமன்றில் ஏன் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான்  கட்டளையிட்டார்.

இந்த நிலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்காக நேற்று திங்கட்கிழமை 15ம் திகதி விசாரணைக்கு எடுத்து கொண்டபோது தேரர்  ஆஜராகாத நிலையில்   சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சார்பாக  முதலாம் தரம் கொண்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்,  மறும் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆஜராகி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் அதனால் நீதிமன்றில் இன்று ஆஜராக முடியவில்லை எனவும் குறித்த தேரர் தங்கியிருக்கும் இடம் என சந்தேகிக்கப்படும் மங்களகம கௌவ்லியாமடு மற்றும் சின்னவத்தை விகாரை பகுதிக்கு தேடிச் சென்றுள்ளதாகவும் அவர் அங்கு இல்லை எனவும் அவர் மறைந்திருக்கும் இடத்தை தேடி வருவதாகவும் நீதவானிடம் தெரிவித்தார்.

Tags: மட்டக்களப்புவிகாரைஅம்பிட்டிய சுமண ரத்ன தேரர்Ampitiya Sumanarathana Theroஇனவாதி
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

எலக்ட்ரிக் வாகன உலகில் புரட்சி! 10 நிமிடத்தில் சார்ஜ் ஏறும் புதிய ‘சூப்பர் பேட்டரி’ கண்டுபிடிப்பு.

அடுத்த செய்தி

கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்திய தூதரகத்துக்கு எதிராக தூண்டிவிட்துள்ளார் – சபா குகதாஸ் குற்றச்சாட்டு!

கண்ணன்

கண்ணன்

தொடர்புடைய செய்திகள்

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!
by Stills
22/12/2025
0

இன்றைய தினம் (22) வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடைசெய்யுமாறு கோரி பொதுமக்கள்  ஆர்ப்பாட்டப் பேரணி  நடத்தினர். இப்போராட்டத்தை கங்கன்குளம்...

மேலும்...

கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள்- வலுக்கும் கண்டனம்

by அரவிந்த்
22/12/2025
0

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரைக்கு முன் இடம்பெற்ற போராட்டத்தில்  நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதற்கு சைவ மகா சபை  கண்டனம்...

மேலும்...

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!
by கண்ணன்
19/12/2025
0

சென்னை, நீலாங்கரை: ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பாகவும், இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்த் தேசியப் பேரவையின் (Tamil National...

மேலும்...

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!
by கண்ணன்
18/12/2025
0

புதன்கிழமை (17) மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள்...

மேலும்...

யாழ்ப்பாணம் பொம்மைவெளியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது: பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணம் பொம்மைவெளியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது: பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை
by கண்ணன்
17/12/2025
0

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பொம்மைவெளி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன்...

மேலும்...

“டிட்வா”புயல்பற்றி இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம் திரிபுப்படுத்தப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளது நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டு.

“டிட்வா”புயல்பற்றி இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம் திரிபுப்படுத்தப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளது நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டு.
by Stills
16/12/2025
0

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பில் தனியார் தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது "டிட்வா" சூறாவளி பற்றி இந்தியா காலநிலை திணைக்களம் இலங்கைக்கு முன்னறிவித்தல்களை விடுக்கவில்லை. இந்திய...

மேலும்...
அடுத்த செய்தி
கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்திய தூதரகத்துக்கு எதிராக தூண்டிவிட்துள்ளார் – சபா குகதாஸ் குற்றச்சாட்டு!

கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்திய தூதரகத்துக்கு எதிராக தூண்டிவிட்துள்ளார் - சபா குகதாஸ் குற்றச்சாட்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

06/12/2025
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்

25/12/2025
ஓ.பன்னீர்செல்வம்   திடீர் மனமாற்றம் ஏன் ?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!

ஓ.பன்னீர்செல்வம் திடீர் மனமாற்றம் ஏன் ?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!

24/12/2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெருமிதம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெருமிதம்

23/12/2025
வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

22/12/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us