2006 தொடக்கம் 2009 வரைக்கும் தமிழ் மக்கள் மீது மிகபெரிய இனப்படுகொலை போரை கட்டவிழ்த்து விட்டு பல லட்சம் தமிழ் மக்கள் சாவுக்கு காரணமாக மகிந்த பாலஸ்தீன தூதுவரை சந்தித்து காசாவில் நடைபெற்று வரும் போர் சமாதானமான முறையில் முடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துள்ளது சாத்தான் வேதம் ஓதுவது போன்று உள்ளது.
இஸ்ரேல்,பலஸ்தீனத்துக்கிடையிலான மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (16) கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் செய்தார்.
பலஸ்தீன தூதருடன் கலந்துரையாடிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ பலஸ்தீனர்களின் ஐக்கியத்தை வலியறுத்தினார். இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த:
பலஸ்தீன ஒற்றுமைக்கான இலங்கைச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் என்ற முறையில் பலஸ்தீன நோக்கத்தை தொடர்ந்து ஆதரித்து வருகிறேன்.
உலகில் எங்கும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை.போர் ஒரு தீர்வுமில்லை. சமாதானமே அவசரத் தேவை.போரினால் இலங்கை பெற்ற அனுபவங்களிலிருந்து பெற்ற படிப்பினைகள் பலவற்றையும் அவர் பலஸ்தீன தூதுவரிடம் எடுத்து விளக்கினார்.
இரு நாடுகளிலுமுள்ள பொதுமக்களின் செழிப்பான வாழ்வைக் கருதி சமாதானம் விரும்பப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.