பேரன்பும் பெரும் பாசமும் கொண்ட எங்கள் ஐயா தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.
தமிழ் இனத்தின் மீதும் தமிழீழ விடுதலையின் மீதும் பெரும் பற்று கொண்டு இயங்கிய உன்னத வணிகப் போராளி. இம்மண்ணை ஆண்ட அதிகார வர்க்கங்கள் பதவிகளை காட்டியும் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் கோடிகளை கொட்டியும் தன் வசப்படுத்த முயன்ற ஒவ்வொரு கணத்திலும் ஒருபோதும் சோரம் போக மாட்டேன் என இறுதிவரை உறுதியுடன் எதிர்த்து நின்று இனத்திற்காக போராடிய ஈடு இணையற்ற பெரும் தமிழர்.
தனிப்பட்ட முறையில் என் மீதும் என் படைப்புக்கள் மீதும் அவர் காட்டிய பேரன்பையும் அற்பணிப்பான அரவணைப்பையும் மூச்சு உள்ளவரை மறக்க முடியாது.
எம் இனத்திற்கான, வணிக உரிமைகளுக்கான எத்தனை எத்தனையோ போராட்டங்கள். அவர் அழைத்து நான் சென்றிருக்கிறேன். நான் அழைத்தும் அவர் வந்திருக்கிறார்.
இனி உங்களைப் போல் ஒருவர் இம்மண்ணில் எவர் பிறப்பர்? வாய்ப்பில்லை என்று வானுறையும் சொல்லும்.
போய் வாருங்கள் ஐயா
கனத்த இதயத்தோடு,
வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
10.09.2024