சென்னையில், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் “தமிழன் விருது சின்னம்” வெளியிடப்பட்டது. புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில், சமூகம், தொழில், அறிவியல் தொழில்நுட்பம், தமிழ் இலக்கியம், விளையாட்டு மற்றும் கலை உள்ளிட்ட துறைகளில், சாதனை புரிந்து வரும் தமிழர்களை தேர்வுசெய்து, ‘தமிழன் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.அந்தந்த துறைகளில் சாதிக்க துடிக்கும் இளையோருக்கும், “நம்பிக்கை நட்சத்திரம் விருது” அளிக்கப்படுகிறது.பத்தாம் ஆண்டு விருது வழங்கும் விழா, வரும் 11-08-20அன்று மாலை 6:00 மணிக்கு நடக்க உள்ளது.
தமிழன் விருது சின்னத்தை சினிமா இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் தி.நகரில் வெளியிட்டார்.
புதிய தலைமுறை செய்தி ஆசிரியர் திருப்பதி, நிர்வாக ஆசிரியர் சீனிவாசன், தலைமை செயல் அதிகாரி ராஜாமணி, நிகழ்ச்சி பிரிவு தலைவர் கார்மல், நிகழ்ச்சி திட்ட இயக்குனர் செல்வகுமார் ஆகியோர் பெற்றனர்.