இன்று திங்கட்கிழமை (05) பிற்பகல் 3.00 மணிக்கு தேசிய மக்கள் சக்தியின் பெண் தலைவர்களான முன்னாள் நகரசபை உறுப்பினர் சமன்மலி குணசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சட்டத்தரணி தனுஷ்கி லியனபடபெந்தி ஆகியோரை வெலிக்கடை பொலிஸில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 2024 வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் அமைச்சின் செலவுத்தொகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு பாராளுமன்ற சுற்றுவட்டத்தின் அருகில் முன்னெடுத்திருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே இன்று அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டம் முடிந்து இரு மாதங்கள் கடந்த பின்னர் வாக்குமூலம் பெறுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் பெண் தலைவர்களை வெலிக்கடை பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.