தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு நினைவு நிகழ்வும் , கனேடிய உணவு வங்கிக்கு உலர்உணவு கையளிப்பு மிகவும் எழுச்சியாக
நடைபெற்றது .
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒழுங்கமைப்பில் தியாகதீபம் திலீபன்
அவர்களின் இறுதிநாள் நிகழ்வு 26/09/2023 அன்று Markham & Steels சந்திப்பில் உள்ள பூங்காவில்
மிகவும் எழுச்சிகரமாக பலர் கலந்து
கொண்டு உணர்வுபூரவமாக நடைபெற்றது. நிகழ்வை ஈழமுரசு நிர்வாகி மாதகல் கண்ணன் அவர்கள் தலைமையில் ஒன்ராறியோ
மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்
மதிப்புக்குரிய லோகன் கணபதிஅவர்கள், நாடுகடந்த தமிழீழ
அரசின் மூத்த உறுப்பினர் மதிப்புக்குரிய ம.கா. ஈழவேந்தன் , மதிப்புக்குரிய யோகேந்திரன், Box Grove Seniors Wellness Association
தலைவி மதிப்புக்குரிய லோகேஸ்வரி யோகராசா மறும் தமிழ்பூங்கா அதிபர்
மதிப்புக்குரிய யோகா அருள் சுப்பிரமணியம் மற்றும் Box Grove seniors Association பல அங்கத்தவர்கள் , நான்கு தலைமுறையைச் சேர்ந்த பல பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
கனேடிய தேசியக் கொடிப்பாடல், தமிழீழ தேசிக்கொடிப்பாடல் , ஈகைச்சுடர் ஏற்றுதல், அகவணக்கம்,
மலர் வணக்கம் என்பன இடம் பெற்று
தியாகதீபம் அவர்களைப்பற்றிய
எழுச்சி உரைகள், கனேடிய உணவு
வங்கிக்கான தேவை என்பன சுட்டிக்காட்டப்பட்டன.
கனேடிய உணவு வங்கிக்கு Box Grove Seniors Association 1000 இறாத்தல்
உணவு கொடையாக வழங்கப்பட்டமை
Kirishna Live மதிப்புக்குரிய கிருஷ்ணலிங்கம் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது
குறிப்பிடத்தக்கது மற்றும் Markham Seniors Association, A.K.T super Market, South Asian supermarket,
பசுமைச் சந்தை, supermarket,
யாழ் சந்தை supermarket, Era supermarket (இரண்டு கிளைகள்)New Spice Land supermarke(இரண்டு கிளைகள் Ajax)Ocean supermarket,
Yogas supermarket, குணம்ஸ் supermarket, Rough Bakery, தினுசா
Take out, Sun City Supermarket , Datta Food, மற்றும் ஏராளமான பொது மக்கள் தாமாக முன்வந்து உணவுக்கொடை செய்தமை குறிப்பிடத்தக்கது. 10,000 இறாத்தலுக்கு மேற்பட்ட உலர்
உணவு அனைவரது முன்னிலையிலும்
கனேடிய உணவுவங்கி பிரதிநிதியிடம்
கையளிக்கப்பட்டது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால்
ஆண்டுதோறும் கனேடிய உணவு வங்கிக்கு உணவுக்கொடை வழங்குவதைப்பாராட்டி
ஒன்ராறியோ மாகாண பாராளுமன்ற
உறுப்பினர் மதிப்புக்குரிய லோகன் கணபதி அவர்களால் பாராட்டுப்பத்திரம
வழங்கப்பட்டது இதனை நாடுகடந்த
அரசியல் விவகார இணைப்பாளர்
மதிப்புக்குரிய மகாஜெயம் அவர்கள்
பெற்றுக் கொண்டார்.
நிறைவாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் உறுதியேற்புடன் நிறைவு பெற்றது.