மாவீரர் நாளைகொச்சைப்படுத்தும் தீயசக்திகளின் நடவடிக்கைக்குதுணைபோகும் அனைத்துசக்திகளுக்கும் எமது மாவீரர்கள் தண்டனைகொடுப்பார்கள்.தலைவரையும் குடும்பத்தையும் உயிருடன்உள்ளது என்று கூறும் முட்டாள்களே உயிருடன் உள்ளவர்களை பழிபோட்டு சாவடிக்கிறீகள். இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரமுயற்சிக்கிறீர்கள்.
இன்னும் எமது ஈழத்தமிழர்கள் ஏமாளிகள் என்று நினைத்து உங்களை நீங்களே எமாற்றுகிறீர்கள். தமிழர்கள் விழிப்பு நிலைக்கு வந்து நீண்ட நாட்களாகிவிட்டது .அடுத்தவனின் உழைப்பில் சொகுசு வாழ்க்கை வாழுபவர்களுக்கு ஏற்றுக்கொள்வது துன்பமாகத்தான் இருக்கும். என்ன செய்வது ஏற்றுத்தான் ஆகவேண்டும். நீங்கள் மாற்றானிடம் விலைபோனதற்காக மற்றவர்களில் பழிபோடுவதை எப்போது திருத்திக்கப்போகின்றீர்கள். மூத்தவர்கள் உண்மை தெரிந்தவர்கள் மௌனமாக இருக்கிறார்கள் என்பதற்காக உங்கள் சுயரூபத்தை இன்னும் நீண்ட நாள்களுக்கு நிலை நிறுத்த முடியாது.
முட்டாள்களே! மாவீரர்களின் தியாகத்தை புரிந்து கொள்ளுங்கள். இறந்தவர்களை இறந்தவர்களாகவே இருக்க விடுங்கள். வேண்டுகோள் இல்லை.மாவீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள். உங்கள் குடும்பம் காணாமல் போய்விடும் எச்சரிக்கை. தாய்நாட்டிற்காக உயிர்நீத்தஅனைத்து மாவீரர்களுடன் தலைவரும் அவரின் குடும்பமும் பார்த்துக்கொண்டும் எம்மை காத்துக்கொண்டும் தான் இருக்கிறார்கள். நாம்இலட்சிய விதையைவிதைத்தோம் அதற்கு மாவீரரின் இரத்தத்தை பாச்சி வளர்த்தோம் அந்தவிதை வளர்ந்து விருட்சமாகி நிற்கின்றது. இனியும் கோமாளி வேஷம் வேண்டாம் உண்மையை உரைப்போம் விரைவில்….. !
மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துனைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழபுரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும்.
இதற்குரிய நாளாக கார்த்திகை 27 ஆம் நாள்தமிழீழ விடுதலைப்புலிகள்அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது எமது மாவீரர் நாள் நினைவுகூறுவதுபோன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு. விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27விடுதலைப்புளிகளால் 1989ஆண்டில்அறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.
போராட்டக் காலத்தில் மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையும், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெற்றன. மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர். 2009 ஈழப்போராட்டத் தோல்வியின் பின் இலங்கை அரசால் மாவீரர்நாள் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டும், மாவீரர்நாள் நினைவு நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டும் உள்ளன.
புலம்பெயர் நாடுகளிலும் தமிழீழத்தில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை முறைகளும் மாவீரர்நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் மாவீரர்துயிலும் இல்லமும், கல்லறைகளும் செயற்கை முறைகளில் வடிவமைக்கப்பட்டு அதற்கென ஒரு மண்டபத்தில் வைத்து மாவீரர்கள் நினைவுகூரப்படுகிறார்கள். முன்னர் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர்நாட்கள் அந்தந்த நாடுகளின் விடுமுறைகளோடு ஒட்டி, ஈழமக்களின் வசதிக்கேற்றபடி நாள் குறிக்கப்பட்டு நினைவுகூரப்பட்டது. தற்போது சில ஆண்டுகளாக அந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பெற்று மாவீரர்நாளானகார்த்திகை 27 நாளிலேயே அனேகமான புலம்பெயர் நாடுகளில் மாவீரர்நாள் நிகழ்கிறது.
மாவீரர் நாள் நிகழ்வுகளில்தமிழீழத் தேசியகொடியை ஏற்றிப் போற்றுதல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. தமிழீழத் தேசியக் கொடி மாவீரர் குடும்ப உறுப்பினர்களால் ஏற்றப்படும். கொடியேற்றப்படும் போது புதுவை இரத்தினதுரையால் எழுதப்பெற்ற ஏறுது பார் கொடி ஏறுது பார்… என்ற உணர்வு மிக்க பாடல் ஒவ்வொரு முறையும் ஒலிக்க விடப்படும்.
மாவீரர் நாள் உறுதிமொழி
உலகத் தமிழர் அனைவரும் மாவீரர் நாளன்று தமிழ் மக்களைக் காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்கள் கண்ட தமிழீழக் கனவை நனவாக்கவும் அரும்பாடு படுவேன் என்றும் உறுதிக்கூறி கீழ்க்கண்ட உறுதிமொழியை எடுப்பார்கள்.
“மொழியாகி,
எங்கள் மூச்சாகி – நாளை
முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை
உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கு
துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்
தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி!”
ஈகைச்சுடரேற்றுதல்
தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான லெப்டினன் சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.