உலகம் முழுவதும் இரு மனங்களை இணைக்கும் வலுவான சக்தி காதலுக்கே உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. மேலும், எந்தக் காதலும் இனம், மதம், மொழி பார்ப்பது அல்ல. அதனால்தான் இன்றளவிலும் காதல், அனைத்து எல்லைகளையும் வேறுபாடுகளையும் வரையறைகளையும் தாண்டி நிற்கிறது. பல காதலர்களை வாழவைத்தப்படி இருக்கிறது..
காதல் விஷயத்தில் பிடிவாதமாக இருந்த ஏஞ்சலின், ’நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வோம்’ எனவும் தந்தையிடமும் தெரிவித்துள்ளார். இதனால் தந்தை – மகள் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. தந்தை – மகள் இடையே நிலவும் பாசம் என்பதே அழகானது; அதிசயமானது. ஆனால், அதையே காதலருக்காக விடும்போது, அதைவிடக் கொடுமை வேறெதுவும் இல்லை. காரணம், பாசத்தைவிட அங்கே காதல் சிறந்ததாக தெரிகிறது. அதிலும் உண்மைக் காதல், உயர்ந்தாக இருக்கிறது. உண்மைக் காதலுக்கு எந்த தியாகத்தையும் செய்யலாம் என்கிற நோக்கில் மிகவும் துணிச்சலான முடிவை எடுத்தார் ஏஞ்சலின்.
பேணிக்காத்து வளர்த்தெடுத்த பெற்றோரையும், பெயர் சொல்லுமளவுக்கு பிரபலமாக விளங்கிய சொத்துகள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு, அந்த ஒற்றை உயிருக்காக வீட்டைவிட்டு வெளியேறினார், ஏஞ்சலின். அவர், தாம் விரும்பிய காதலரை எந்த நிலையிலும் கைவிடாது உறுதியளித்தப்படியே கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடி, இறக்கை விரித்து இனிய பொழுதுகளை இத்தனை ஆண்டுகளாய்க் கழித்துவரும் வேளையில், அவர்களுடைய காதல் கதை வெளியுலகுக்குத் தெரியவந்ததே ஏஞ்சலின் பெற்றோரால்தான்.