19ம் தேதி அன்றும், செல்போன்களை செக்யூரிட்டி அறையில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர். வேலை முடிந்து மாலை வந்து பார்த்தபோது, 18 பேரின் செல்போன்கள் மொத்தமாக காணாமல் போனதை கண்டு அதிர்ந்துள்ளனர். புதுச்சேரி பகுதியில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள், தொழிற்சாலைக்குள் செல்லும் முன், செல்ஃபோன்களை பாதுகாப்பாக செக்யூரிட்டி அறையில் வைத்துவிட்டு செல்வது வழக்கம்.
பாதுகாப்புக்காக அங்கிருந்த செக்யூரிட்டியும் காணாமல் போன நிலையில், சந்தேகமடைந்த தொழிலாளர்கள், தொழிற்சாலையில் மேலாளரிடம் சொல்லி போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணையை தொடங்கினர். அப்போது, காணாமல் போன செக்யூரிட்டி பாண்டியராஜன் மூன்று தினங்களுக்கு முன்பாக பணியில் சேர்ந்தது தெரியவர, அவர்தான் திருட்டு வேலையில் ஈடுபட்டார் என்றும் கண்டுபிடுத்துள்ளனர். தொடர்ந்து, திருடுபோன செல்போன் எண்களை டிராக் செய்து பார்த்தில் பாண்டியராஜன் திண்டிவனத்தில் இருந்தது