வள்ளுவப் பார்வையில் தினம் ஒரு குறளாய் 2020ம் ஆண்டு காலடிவைத்த செல்வன் கவிதன் கவிதாசன் அவர்கள் 11.11.2023 அன்று நட்பாராய்தல் அதிகாரத்திலே 800 வது குறளை தொட்டுள்ளமை பெரும் சிறப்பாகும்.
இவர் 3வது அகவை தொடக்கம் 10வது
அகவை வரை பாமுகம் லண்டன் தமிழ் வானொலி ஊடகத்தின் ஊடாகப் பயணித்து, தினமும் பல ஆக்கங்கள் படைத்து வந்தார்.
அது மட்டும் அல்லாமல் தினம் ஒரு குறள் எனும் தலைப்பில் தனது திறனை செயற்படுத்தி வந்துள்ளார்.
பின் தவிர்க்க முடியாத சூழலினால்
721 வது,குறளை லண்டன் தமிழ் வானொலியில் நிறைவாக்கி , தொடர்ச்சியாக அமெரிக்கா முத்தமிழ் தொலைக் காட்சியிலும் தினம் ஒரு குறள் செய்துவந்தார்.
தற்பொழுது மிகவும் சிறப்பாக
“தொடரும் இணையத்தளம்” ஊடாக 11.11.2023 அன்று குறள் எண்
எண்ணூறாவது இலக்கத்தை (800) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
க.இராஜேந்திரன்(திருச்சி)
தலைமையில் நடைப்பெற்ற இணைய தளம் ஊடான மூதுரை மனனப் போட்டியிலும் பங்கு கொண்டு முதல் இடத்தைப் பெற்றதுடன்,
இளஞ் சிறார்களில் இவ்வளவு நேர்த்தியாக தமிழ் பேசும் சிறார்களில் கவிதனும் ஒருவராவார். இதனால் பல தளங்களில் பாராட்டும் முதன்மை நிலையையும் பெற்றுக்கொண்ட சிறப்புக்குரிய சிறுவன் கவிதன் ஆகும் என்பதை பெருமையுடன் சுட்டிக் காட்ட முடிகிறது.
மேலும் நமது உலகத் தமிழ்க் கூடல் நிகழ்வுகளில் கலந்து பரிசும் பெற்றவர்!
அது மட்டும் அல்லாமல்.. தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக நடாத்தப்படும், எழுச்சிக்குயில், பேச்சுப்போட்டி, போன்றவற்றிலும் அரங்கேற்றி,வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இந்த ஆண்டின் மாவீரர் ஞாபகார்தப் பேச்சுப் போட்டியில் (எதிர்வரும் சனிக்கிழமை 18.11.23) அன்றய நாள் கலந்து கொள்ளவுள்ளார்.
தமிழ்க் கல்விச் சேவையினால்
நடாத்தப்படும் பொதுத் தேர்வுகளிலும் சிறப்பாகச் செய்து வகுப்பேற்றம் செய்யப்பட்டு வருகின்றார்.
அமெரிக்க முத்தமிழ் சிறுவர் பேரவையால் நடாத்தப்படும், மாதாந்த சிறுவர் கவி அரங்குகளிலும் இணைந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்.
கர்நாடக இசையும் முறைப்படி கற்று வருவதுடன்..
பாமுகத்தில் மெய்நிகர்வழியூடாக
திரு.தேவநாயகம் தேவானந் அவர்களால்(ஆசிரியர் யாழ்ப்பாணம்)
நெறியாள்கை செய்யப்பட்ட பாட்டி நாடகத்தில் கதை கூறும் கட்டியக்காரனாகப் பாத்திரமேற்று சிறப்பாகவும் நடித்துள்ளார்.
இவ்வாறு பல் தளங்களிலும் தன்னை விருப்போடு ஈடுபடுத்தி வளர்த்துக் கொள்கின்றார் என்பதனை பெருமையுடன் …தெரியப்படுத்துகின்றேன்.
புலம் பெயர்ந்தாலும் வாழிட மொழியுடன், தமிழ் மொழியும் தாயகப் பிணைப்பும் உயிர்ப்புடன் நிலைக்க வைக்கும் எனும் நம்பிக்கையுடன் தொடர்கிறார்.
“தமிழே பேச்சு! தமிழே வீச்சு!தமிழே மூச்சு”