இலங்கை கேகாலையில் போகல மினிரன் சுரங்கத்தில் பூமிக்கடியில் தரை மட்டத்திலிருந்து 124 மீற்றர் ஆழத்தில் உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.அந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் உணவை பெற்றுக்கொள்வதற்கான வசதி காணப்படுகிறது.
போகல மினிரன் சுரங்கம் என்று அழைக்கப்படும் “விஜயபால மலலசேகர” சுரங்கத்தில் இந்த உணவகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.இந்த மினிரன் சுரங்கத்தை பார்வையிட சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பதோடு, 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் நுழைய அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
150 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான போகல மினிரன் சுரங்கத்திலிருந்து கிராஃபைட் ஏற்றுமதியாகியதால் இந்நாட்டிற்கு கணிசமான அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்துள்ளது.
இலங்கை சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது கேகாலை மாவட்டத்தின் தலை நகரமாகும். கொழும்பு-கண்டி பெருந்தெருவில் கொழும்பிலிருந்து 78 கிலோமீட்டர்தொலைவிலும், கண்டியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இலங்கையின் காரிய படிவுகள் போகலை சுரங்கம் இந்நகரத்தின் அருகில் காணப்படுகிறது.
இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெறுகிறது. மேலும் தேயிலை, இறப்பர், தென்னை பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.
பிரிவு | மொத்தம் | சிங்களவர் | இலங்கைத் தமிழர் | இந்தியத் தமிழர் | முஸ்லிம்கள் | பரங்கியர் | ஏனைய |
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 17430 | 15882 | 629 | 153 | 528 | 58 | 180 |
நகரம் | 17430 | 15882 | 629 | 153 | 528 | 58 | 93 |
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:
பிரிவு | மொத்தம் | பௌத்தர் | இந்து | இஸ்லாம் | கத்தோலிக்கம் | ஏனைய கிறிஸ்தவம் | ஏனைய |
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 17430 | 14926 | 411 | 785 | 981 | 313 | 14 |
நகரம் | 17430 | 14926 | 411 | 785 | 981 | 313 | 14 |