வவுனியாதேசிய கல்வியியற் கல்லூரி யில் பயிலும் முதலாம் வருட ஆசிரிய மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக அவர் விடுதியில் தங்கியிருந்த நிலையில், வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் நேற்று(17.07.2023) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு – காரைத்தீவு பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் சடலம் மீதான பிரேத பரிசோதனை வவுனியா பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பபடுகிறது.